உண்டியல்

திருப்பதி உண்டியல்
நிரம்பி வழிகிறது!
வேளாங்கன்னி உண்டியல்
நிரம்பி வழிகிறது!
சபரிமலை உண்டியல்
நிரம்பி வழிகிறது!

பாவம்….
என் பேத்தி

அவள் உண்டியல்
அழுது வழிகிறது!!

                       –        புலவர் இராமசாமி