கொரோனா வைரஸ்

கொள்ளைநோய் வரிசையிலே
கொடியாய் பரவிடுதே!
கொஞ்சநேரத் தாக்குதலால்
கொன்றுதான் களித்திதே!

வருவதும் தெரியாமல்
வளர்வதும் உணராமல்
வரவுகளாய் உயிர்களை
வாரிக்கொண்டு போயிடுதே!

சீனநாட்டில் பொலித்தது
சிகிட்சைகளை பொய்க்குது
மரணங்களால் மெய்க்குது
மருந்தின்றியே பயிர்க்குது

வேண்டுவோர் மனங்களையும்
வேதனையால் வருத்துது.
கண்டறிந்த மருத்துவரையும்
கருணையின்றி கொன்றது.

இன்றிருப்பார் நாளையில்லை!
இதையுணர நாதியில்லை!
இயற்கையின் நியதியினை
இனியாவது நினைவிலிணை.

ஆயுதங்கள் குவிப்பதும்
ஆணைகளை திணிப்பதும்
கொரானாவை அழிக்குமா?
கொல்லும்நிலை அகலுமா!

ஐந்திணைந்த உலகவாழ்வை
ஆறறிவாரே தொலைப்பதனால்
குமுறுகின்ற இயற்கையழிவே
பலவகையில் வருத்திடுதே!

சிந்திக்கும் உயரினமே!
சீரழிவும் தன்னலமே!
பொல்லாதவை எவையானாலும்
பொதுநலத்தில் தவிர்க்கலாமே!…

– நன்மொழியார்