Azhagiya Nayagi Ammal

அழகிய நாயகி அம்மாள்

     அழகிய நாயகி அம்மாள் பிரபல எழுத்தாளர் திரு. பொன்னீலன் அவர்களின் தாயார். இவர் எழுதிய கவலை நாவல் மிகவும் புகழ் பெற்றது.

    பிறந்த வருடம் 1925. குமரி மாவட்டம் ஈத்தாமொழி கிராமத்திற்கு அருகேயுள்ள மணிக்கட்டிபொட்டல் ஊரில் வாழ்ந்தார். கணவர் சிவ. பொன்னீலவடிவு. தந்தையின் பெயரையே தன் பெயராக வைத்து அவர் மகன் பல புத்தகங்களை எழுதி வருகிறார்.

     அழகிய நாயகி அம்மாள் எழுதிய “கவலை” நாவல், 1998-ல் பாளையங்கோட்டை வளனார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை இந்த நூலை வெளியிட்டது. நெஞ்சு வெடித்து விடுமோ என்று பயப்படுகிற அளவுக்கு பெண்கள் துயரங்கள் பதியப்பட்ட தன் வரலாற்று நூலாகும்.

    தமிழ்ச் சூழலில் பெண்களின் தன் வரலாறு எழுதியலின் முதல் வருகையாக நாட்டார் வழக்காற்றியலான அழகிய நாயகி அம்மாளின் ‘கவலை’ இடம் பெறுகிறது. ஆசிரியர் தன்னிச்சையாக வாழ்வியல் கூறுகளை நுணுக்கமாகப் பேசி தனது வலியைப் பதிவு செய்துள்ளார்.

Give Your Opinion