சிந்தனைத் துளிகள்……

     முட்டையிலிருந்து பிறந்த வாத்துக்குஞ்சுகள் நீரில் நீந்திச்செல்ல பயிற்சி பள்ளியில் போய் கற்க வேண்டியதில்லை. தானே நீந்திச் செல்லும். ஆனால், மனிதர்கள் எண்ணையும், எழுத்தையும் கற்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறார்கள்.       தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது. சிலப்பதிகாரத்தில் நடன அரங்குத்தூணின் நிழல் அரங்கில் விழாது. இவை எதனைக் காட்டுகிறது? ‘சில பெரிய மனிதர்களின் மனசாட்சியின் குரல் வெளியே ஒலிக்காது என்பதையே.’       பல மணி நேரம் காலதாமதமாக வரும் ரயில்களுக்கு […]

கொரோனா வைரஸ்

கொள்ளைநோய் வரிசையிலே கொடியாய் பரவிடுதே! கொஞ்சநேரத் தாக்குதலால் கொன்றுதான் களித்திதே! வருவதும் தெரியாமல் வளர்வதும் உணராமல் வரவுகளாய் உயிர்களை வாரிக்கொண்டு போயிடுதே! சீனநாட்டில் பொலித்தது சிகிட்சைகளை பொய்க்குது மரணங்களால் மெய்க்குது மருந்தின்றியே பயிர்க்குது வேண்டுவோர் மனங்களையும் வேதனையால் வருத்துது. கண்டறிந்த மருத்துவரையும் கருணையின்றி கொன்றது. இன்றிருப்பார் நாளையில்லை! இதையுணர நாதியில்லை! இயற்கையின் நியதியினை இனியாவது நினைவிலிணை. ஆயுதங்கள் குவிப்பதும் ஆணைகளை திணிப்பதும் கொரானாவை அழிக்குமா? கொல்லும்நிலை அகலுமா! ஐந்திணைந்த உலகவாழ்வை ஆறறிவாரே தொலைப்பதனால் குமுறுகின்ற இயற்கையழிவே பலவகையில் […]

உண்டியல்

திருப்பதி உண்டியல் நிரம்பி வழிகிறது! வேளாங்கன்னி உண்டியல் நிரம்பி வழிகிறது! சபரிமலை உண்டியல் நிரம்பி வழிகிறது! பாவம்…. என் பேத்தி அவள் உண்டியல் அழுது வழிகிறது!!                        –        புலவர் இராமசாமி

இரவல் கேட்கிறேன்

கண்சிமிட்டல்கள்ஆயிரம் கொடுத்துபேனா மையைதீர்த்துவிட்டாய்   இரவல்கேட்கிறேன்கண்மை கொடுத்துஎன் கவிகாப்பாயா….! – விபின் அலெக்ஸ்

கன்னியாகுமரி மாவட்டம்

     மனிதன் முதன்முதலில் தோன்றியதாகக் கருதப்படும் புனித பூமி – கன்னியாக்குமரி மாவட்டம்.      அகஸ்தீஸ்வரம் – தோவாளை – கல்குளம் – விளவங்கோடு ஆகிய வட்டங்கள் அடங்கிய குமரி மாவட்டத்தில் முதல் இரு வட்டங்களைக் கொண்ட நிலப்பரப்புக்கு நாஞ்சில் நாடு என்றும், அதன்பின் நான்கு வட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்புக்கு தென்திருவாங்கூர் என்றும் பெயர் பெற்றிருந்தன. இம்மாவட்டத்தை முதல் முதலில் ஆட்சி செய்தவர்கள் ஆய் மன்னர்கள். ஆய் அண்டிரன் – திதியன் – அதியன் – நாஞ்சில் […]