கொரோனா வைரஸ்

கொள்ளைநோய் வரிசையிலே கொடியாய் பரவிடுதே! கொஞ்சநேரத் தாக்குதலால் கொன்றுதான் களித்திதே! வருவதும் தெரியாமல் வளர்வதும் உணராமல் வரவுகளாய் உயிர்களை வாரிக்கொண்டு போயிடுதே! சீனநாட்டில் பொலித்தது சிகிட்சைகளை பொய்க்குது மரணங்களால் மெய்க்குது மருந்தின்றியே பயிர்க்குது வேண்டுவோர் மனங்களையும் வேதனையால் வருத்துது. கண்டறிந்த மருத்துவரையும் கருணையின்றி கொன்றது. இன்றிருப்பார் நாளையில்லை! இதையுணர நாதியில்லை! இயற்கையின் நியதியினை இனியாவது நினைவிலிணை. ஆயுதங்கள் குவிப்பதும் ஆணைகளை திணிப்பதும் கொரானாவை அழிக்குமா? கொல்லும்நிலை அகலுமா! ஐந்திணைந்த உலகவாழ்வை ஆறறிவாரே தொலைப்பதனால் குமுறுகின்ற இயற்கையழிவே பலவகையில் […]

உண்டியல்

திருப்பதி உண்டியல் நிரம்பி வழிகிறது! வேளாங்கன்னி உண்டியல் நிரம்பி வழிகிறது! சபரிமலை உண்டியல் நிரம்பி வழிகிறது! பாவம்…. என் பேத்தி அவள் உண்டியல் அழுது வழிகிறது!!                        –        புலவர் இராமசாமி

இரவல் கேட்கிறேன்

கண்சிமிட்டல்கள்ஆயிரம் கொடுத்துபேனா மையைதீர்த்துவிட்டாய்   இரவல்கேட்கிறேன்கண்மை கொடுத்துஎன் கவிகாப்பாயா….! – விபின் அலெக்ஸ்

கருத்துப் பொட்டலம்

ஆகஸ்ட் மாதம் வெளியிட இருக்கும் நன்மொழிக் கவிஞர் எம். ஏ. தேவதாசன் அவர்கள் எழுதிய ‘கருத்துப் பொட்டலம்‘ நூலின் சிறு பகுதி: தெளிந்திட சிந்தித்தால்தெரிந்திட வாழலாமே! வெறுப்பும் விருப்பாகிடும்பழகிடும் பழக்கத்தால்! அதிகாரங்கள் திருடரானால்இழப்பெல்லாம் மக்களுக்கே! ஆள்வைத்தும் அடித்திடுவாள்அகங்காரி மனைவியாளே! மாமிசமுண்ணும் மனிதரிடம்மனிதபண்பும் மாறலாகும்! அரவாணியின் அங்ககீனத்தைஅங்கீகரிக்க வேண்டியதே! இலவசத்தின் இழப்பெல்லாம்டாஸ்மார்க் அழித்திடுமே! அம்மாவென் றழைக்கையிலேஅனைத்தும் அடங்கிடுமே! காதலுணர் வில்லாதவன்கபோதிக் கொத்தவனே! தமக்கையின் உறவும் தாயின் மறுப்பதிவே! பணங்கறக்கும் உபதேசத்தால்பார்முழுவதும் கோயில்கள்! தலைவரெல்லாம் கோடீஸ்வரர்தகுதிசேர்க்கும் பாரீசுவரர்! கோவணத்தை கொடியிலிட்டுகொடிமரத்தில் […]

தென்றல் வீசும்

ஆகஸ்ட் மாதம் வெளியிட இருக்கும் தென்றல் வீசும் குறுநாவலின் சிறு பகுதி             மழைமேகம் சில நொடிகளிலே லேசான தூறலோடு கூடிய மழைக்காற்றை மாணவர்களுக்கு தூதுவிட்டது; பத்திரமாக ஒதுங்கி நிற்கும்படி கூற. அர்ச்சனாவும், சோபாவும் வேகமாகச் சென்று அருகில் இருந்த பெண்களுக்கான பைக்-செட்டை அடைந்தனர். மாணவர்களுக்கு பைக்கை நிறுத்த பைக்-செட் இருப்பதுபோல, மாணவிகளுக்கும் தங்கள் வாகனங்களை நிறுத்த மாணவர்களின் பைக்-செட்டிற்கு எதிர்த்தாற்போல் ஒரு பைக்-செட்டினை தனியாக அமைத்து கொடுத்திருந்தது கல்லூரி நிர்வாகம். மற்றசில பெண்களும் நனைக்கும் மழையிலிருந்து […]

சாரல் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா – வீடியோ பதிவு

சாரல் கவிதைகள் நூல் வெளியீட்டு விழா – முழு நிகழ்ச்சி வீடியோ பதிவு   வருங்கால கவிஞர்களுக்கு ஆலோசனை வழங்கிய – திரு. பொன்னீலன் அவர்களின் உரை – சாரல் கவிதைகள் நூல் வெளியீடு   அழகானப் பேச்சு – சாரல் கவிதைகளை மனம் திறந்து வாழ்த்தும் திரு. குற்றாலதாசனின் உரை   எதார்த்தமான கவிதைகள் – “சாரல் கவிதைகளின்” எதிர்மறை கருத்துக்களை ஏற்று வாழ்த்தும் லாரன்ஸ்மேரியின் உரை   மங்காவிளை டி. ராஜேந்திரனின் உரை – […]

சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!

நாட்டுமக்களை நாடித்தேடி அழைக்கின்ற – நம்மவர்க்குநாடாளுமன்றத் தேர்தல் வந்ததே! வருத்துதே!நடைமுறை அழிக்கவே நாசங்களை விழைக்கவேநலிந்தவர் தொடரவே நமக்குறவாய் வந்ததே! அடிப்படைக் கிராமங்களையே அறிந்திடா தகுதியில்விவசாயத்து நிலங்களை கண்டிடாத பகுதியினராய்ஏழை எளியோர் வாழ்க்கையறியா நிலமையில்ஏய்த்திடும் பொய்மையில் வேட்பாளராய் வருகிறார்! எவரெவரோ வருகிறார் நமதுவேட்பாளர் என்கிறார்எவரையுமே தெரியாமலே வாக்குகளைக் கேட்கின்றார்கட்சிகள் சின்னத்தையே நமதுசின்னம் என்கின்றார்கடமையென வற்புறுத்தி காசுபரிசுகள் திணிக்கின்றார் மக்களாட்சி வந்ததாலே வாக்கு விலையும் ஏறிப்போச்சிகட்சியாட்சி மாற்றத்தாலே இனமதங்கள் வெறியிலாச்சிகொள்கையும் கொள்ளையும் பொய்மையில் ஒன்றாச்சிகொடுமதியே நாளும்பெருகி கோடிகளாய் துயரகளாச்சி சட்டங்கள் […]