கருத்துப் பொட்டலம்

ஆகஸ்ட் மாதம் வெளியிட இருக்கும் நன்மொழிக் கவிஞர் எம். ஏ. தேவதாசன் அவர்கள் எழுதிய ‘கருத்துப் பொட்டலம்‘ நூலின் சிறு பகுதி: தெளிந்திட சிந்தித்தால்தெரிந்திட வாழலாமே! வெறுப்பும் விருப்பாகிடும்பழகிடும் பழக்கத்தால்! அதிகாரங்கள் திருடரானால்இழப்பெல்லாம் மக்களுக்கே! ஆள்வைத்தும் அடித்திடுவாள்அகங்காரி மனைவியாளே! மாமிசமுண்ணும் மனிதரிடம்மனிதபண்பும் மாறலாகும்! அரவாணியின் அங்ககீனத்தைஅங்கீகரிக்க வேண்டியதே! இலவசத்தின் இழப்பெல்லாம்டாஸ்மார்க் அழித்திடுமே! அம்மாவென் றழைக்கையிலேஅனைத்தும் அடங்கிடுமே! காதலுணர் வில்லாதவன்கபோதிக் கொத்தவனே! தமக்கையின் உறவும் தாயின் மறுப்பதிவே! பணங்கறக்கும் உபதேசத்தால்பார்முழுவதும் கோயில்கள்! தலைவரெல்லாம் கோடீஸ்வரர்தகுதிசேர்க்கும் பாரீசுவரர்! கோவணத்தை கொடியிலிட்டுகொடிமரத்தில் […]

தமிழ்ப்பாவை

தத்தையிவள் அத்தைமகள் சித்திரமாப் பூத்தயிவள் மெத்தென்ன பூத்தனங்கள் அத்தான்சேர் நாளெண்ணிச் சித்திரைகள் பத்தாகக் காத்துமனம் பித்தானாள்; இத்தனைக்கும் சீர்கேட்டே அத்தைமனம் கல்லானாள்;  எத்தனையோ சீர்வரிசை சித்தம் கலங்கவைக்கும் அத்தனையும் போர்வரிசை! பூத்தபலன் கைமலர முத்தாடும் பூவையிவள் தித்திக்கக் காதலன்கைச் சொத்தாக்கித் தருவாயோ சுடரொளியே தமிழ்ப்பாவாய்!….. ஆசிரியர் : கு. சுயம்பு லிங்கம் புத்தகத்தின் பெயர் : தமிழ்ப்பாவை பாடல் எண் : 6

சாரல் கவிதைகள் – விரைவில்

     எமது அடுத்த வெளியீடு – ‘சாரல் கவிதைகள்’.      157 கவிதைகளின் தொகுப்பாய் விரைவில் வெளியாக இருக்கிறது.      சாரல் கவிதைகள் நூல் ‘பூஞ்சைகள் இல்லாத பலாப்பழம்’. வேர்ப்பலா! இதற்குள் 157 சுளைகள் உள்ளன. அத்தனையும் தேன்சுவை. – புலவர். கு. பச்சைமால், நிறுவனர் – தமிழாலயம் (வாழ்த்துரையில்)      ‘பெற்றோரை வணங்குகிறேன்’ முதல் ‘நாமென்பதே உயரின அடையாளம்’ ஈறாக 157 கவிதைத் தலைப்புகளில் எழுதப்பட்ட இக்கவிதை தொகுப்பு ஒரு […]

வெட்கம்

வெட்கத்தால்சாய்த்துவிடாதேமெல்லமெல்லஉன்வசமாக்கு……        –   விபின் அலெக்ஸ்

வாழ்வின் எல்லை

அளவற்ற பரபப்பினில் வாயுக்கள்ஆங்காங்கு எரிந்திடும் சூரியன்கள்சூரியனின் சிதறல்கள் கோளங்கள்கோளத்தில் அமைந்ததே நமதில்லம்      வாழிடத்து வசதிகள் பூமிதனில்     வளங்களும் நலங்களும் இணைந்திடவே     காலங்கள் மாற்றிடும் சுழற்சியிலே     கவலைகள் இணைந்திடும் நிகழ்ச்சியிலே அறிவினம் என்றால் ஆய்ந்திடணும்அறிவீனம் சேர்ந்தால் மாய்த்திடணும்தன்னினம் வாழ்ந்திட உழைத்திடணும்தன்னலம் வளர்ந்திட உயர்ந்திடணும்      சாதியும் மதங்களும் சாவதில்லை     சார்ந்தவர் பண்பாய் நிலைப்பதில்லை     வெறியினால் அலைவதில் அமைதியில்லை     வெறுமையாய் மடிவதில் மதியுமில்லை இரவும் பகலும் ஒரேநாளேஇன்பமும் […]