KUMARESAN

சா. குமரேசன்

     பேராசிரியர் முனைவர் சா. குமரேசன் கன்னியாகுமரி மாவட்டம், அகதீஸ்வரம் தாலுகா, இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எறும்புக்காட்டை அடுத்த பருத்திவிளை கிராமத்தில் ஆ. சாமிவேல், த. அன்னம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இளங்கலை, முதுகலை, ஆய்வு இளம் முனைவர் பட்டங்களை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

     முனைவர் பட்டத்தை முழுநேர ஆய்வு மாணவராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமிக் கல்லூரியில் ஆய்வு செய்து முடித்துள்ளார்.

     முன்னூறு ஆண்டுகளாக, கடந்த 7 தலைமுறையாக சித்த மருத்துவசேவை செய்து வருகிறார்.

     கடந்த 30 ஆண்டுகளாக குமரித்தமிழ் ஆய்வு மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி குமரி கண்டத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.

     60-திற்கு மேற்பட்ட பன்னாட்டு, தேசிய, மாவட்ட கருத்தரங்குகளில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்பித்துள்ளார்.

     2008 ஆம் ஆண்டு மதுரை நாடார் மகாஜன சங்கம் கும்பகோணத்தில் நடைபெற்ற மாநாட்டில் இவருடைய மருத்துவ, சமூக சேவையைப் பாராட்டி சாதனையாளர் விருது வழங்கியது.

     2009 ஆம் ஆண்டு தஞ்சை தமிழய்யா தமிழ்சங்கம் இவருடைய இலக்கிய பணியைப் பாராட்டி ‘தமிழ் சுடர் விருது’ வழங்கி கௌரவித்தது.

     இவர் 35-க்கு மேற்பட்ட இலக்கிய, ஆய்வு நூற்களை எழுதியுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் பழவிளை நாடார் மஹாஜன சங்கம் காமராசர் கல்வியல் கல்லூரியில் ஐந்தாண்டுகள் தமிழ்த்துறை விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு புனித ஸ்டீபன்ஸ் கல்வியல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றியுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக பழவிளை காமராஜ் கல்வியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியுள்ளார்.

     கடந்த 8 ஆண்டுகளாக குமரி மாவட்ட கம்பன் கழக தலைவராக செயல்பட்டு வருகிறார். அவர் சைவ சித்தாந்த ரெத்தினம், திருமுறைச் செல்வர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

     இவர் பொதுநல சேவாதள தலைவராகவும், குமரி மாவட்ட கம்பன் கழகத் தலைவராகவும், குமரித் தமிழ் ஆய்வு மைய தலைவராகவும், மார்ஷல் நேசமணி பேரவையின் பொதுச் செயலாளராகவும், குமரி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

     2005-ல் வரலாற்றாசிரியர் விருது குமரித்தமிழ் ஆய்வு மையம் வழங்கியது. 2008-ல் கவிஞர் விருது குமரி மாவட்ட கம்பன் கழகம் வழங்கியது. கதை ஆய்வுச் சுடர் விருது (2015) திருவையாறு தமிழய்யா தமிழ்சங்கம் வழங்கியது. இலக்கிய பணியைப் பாராட்டி குமரி மாவட்ட இராஜ கோகிலா அறக்கட்டளை ‘தமிழ் சுடர் விருது’ 2019-ல் வழங்கியது.

 

Author’s Books

Get in Touch