Description
விரைவில் மின்னூலாக
கவிஞர் தங்க அரசு அவர்கள் அரிய காப்பியம் படைத்துள்ளார்.
வழுதி குங்குமம் இவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாக உருவாக்கித் தேர்ந்த கதையோட்டமும் தெளிந்த கவிதையோட்டமும் மிளிர காப்பியத்தை இயக்கியுள்ளார்.
ஏறத்தாழ இருபது உறுப்பினர்களைக் காப்பியத்தில் பேச வைத்துள்ளார். அவரவர் பண்பிற்கு ஏற்பப் பெயர்கள் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. இது ஒரு சிறப்பு.
பலவகை சந்தங்களில் கவிதைகள் அசைகின்றன. நடக்கின்றன. துள்ளுகின்றன. ஓடுகின்றன. இது மற்றொரு சிறப்பு.
புதுபுது உவமைகள், பொங்கிவரும் கற்பனைகள், செவ்விய சொல்லாட்சி, சீர்திருத்தக் கருவமைப்பு இவற்றால் காப்பியம் புதுமையும், பொலிவும் பெறுகின்றது.
நகைச்சுவையைக் கவிதையில் நளினமுறக் காட்டுகின்றார். கிறுக்கனும் கோயிலும், வேறொரு கிறுக்கன் இப்பகுதியில் நம்மை அறியாமலே நகைப்பை உண்டாக்குகின்றன.
சமுதாயத்தில் காணும் இழிவு. கயமை, பழிச் செயல், பொல்லாங்கு, பொய்மை, போலிகள் முதலியவற்றை மிக நன்றாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார் கவிஞர்.
விரைவில் மின்னூலாக