அவனும் மனிதனே! – (சமூக நாடகம்)

குளச்சல் சி. எஸ். ஐ தொழுநோய் மருத்துவமனையில் வைத்து, என்னுடைய ‘நல்ல மனம்’ நாடகம் நடைபெற்றது. அப்போது தொழுநோயாளிகளைப் பார்க்கும், பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் அவல நிலையைப் பற்றிய நெருடல் என் நெஞ்சில் நிறைந்தது. தொழுநோயாளிகளை மையமாக வைத்து, நாடகமொன்று எழுத எண்ணினேன்.
குழந்தை எழுத்தாளர் துரையரசு அவர்கள், கதையொன்றைத் தந்து, நாடகமாக வடிக்கப் பணித்தார். நாடகமாக்கினேன்.

அண்ணல் காந்தி மகான் போன்ற சான்றோரின் படங்களை வீட்டில் வைத்தோம் அன்று. படங்களை பார்க்கும் போது, அவர்தம் கருத்துக்கள் நம் மனதை நெருகும். நம் வாழ்க்கையிலும் சேவையைச் சேர்க்க துடிக்கும். ஆனால், இன்றோ நடிகர்களின் படங்களை வீட்டில் வைத்து, திரு விளக்கு இடும் ஒரு சமுதாயம் உருவாவதைக் காண்கிறோம்.

காந்திஜியின் நிர்மானத் திட்டங்களில் ஒன்று, தொழுநோய் துயர் துடைக்கும் பணி. அவர் கூறுவில்லை – செய்து காட்டினார். தன்னுடைய ஆஸ்ரமத்திலேயே நோயாளிகளை வைத்து, சிசுரூஷை செய்து, உலகுக்கு உணர்த்தினார். இன்று, அவர் மறைந்த நாளை உலகத் தொழுநோய் ஒழுப்புத் தினமாக உலகின் ஒவ்வொரு நாடுகளும் விழா எடுக்கின்றன.

Category: Tags: ,

Description

E – Book Link