பெரும் பயன்தரும் சிறுதானியங்கள்

      சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதைப் பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

     மருத்துவ வசதி இல்லாத காலத்திலும் நம் முன்னோர்கள் நலமுடன் வாழ்ந்தார்கள். ஆனால், தற்போது மாத்திரைகள்தான் நமக்கு “மாற்று இரை”யாகி (மாற்று உணவு) விட்டன. இன்று விதவிதமான சுவைகளில் உணவு வகைகள் வந்தும்கூட அவை நமக்கு ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தந்ததாகச் சொல்வதற்கில்லை. அதற்குப் பதிலாக பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு கலர்கலரான மாத்திரைகளை விழுங்கி அவதியுறுகிறோம்.

     இன்றைக்குத் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வு மெல்ல எட்டிப்பார்க்கத் தொடங்கியிருக்கிறது. காரணம் நம் உடல் ஏற்படுத்தும் சிக்கல். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால்தான் முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அதற்கு நமக்கு உற்ற துணையாக இருப்பவை சிறுதானியங்கள். நம் பாட்டியும் தாத்தாவும் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்வதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறுதானியங்களால் ஆன பாரம்பரிய உணவு வகைகளே.

     நம் அனைவரின் வீட்டிலும் சிறு குறுந்தானிய உணவுகளை கட்டாயமாக்குவோம். சத்துக்கள் நிறைந்த குறுதானிய உணவுகளை இனி வாரம் ஒரு நாளாவது நம் உணவில் சேர்த்துக் கொள்வோம்.   நம் வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தடம் அமைப்போம்.

Description

விரைவில் மின்னூலாக