திரு-தமிழக போராட்ட தளபதி சிதம்பரநாதன்

     பூச்சிவிளாகம் ஈன்ற புண்ணிய புதல்வன் தான் மாவீரன் சிதம்பரநாதன் ஆவார்.  குமரி மண்ணின் மைந்தனாக தோன்றிய இவர் மிகச் சிறந்த சிந்தனையாளராகவும், சிறந்த அமைச்சராகவும், சிறந்த வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.

     திருவிதாங்கூரில் தமிழ் மக்கள் பட்ட கொடுமைகளை விரட்ட, தாய்த் தமிழக நாட்டோடு இணைக்கப் போராடியவர் மாவீரன் சிதம்பரநாதன்.

     நன்றாக படித்து சட்டப்படிப்பை சென்னையில் முடித்தார். குழந்தை பருவத்தில் வீரமிக்க கதைகளைக் கேட்டு விவேகமிக்க தியாக சீலராக வாழ்ந்தார்.

     இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் எவ்வாறு இளமைப் பருவத்தில் வாழ்ந்தார், சிதம்பரநாதனின் இளமைப் பருவத்தின் குணநலன்கள், அவருடைய படிப்பு போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

     திருவிதாங்கூர் போராட்ட இயக்கங்கள் பல. குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே தோன்றி விடுதலைக்காக போராடின. ஆனால் விடுதலைக்காக போராடிய அரசியல் இயக்கங்களான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ், போட்டித் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் ஆகிய இரண்டும் அரசியல் இயக்கங்கள் அகும்.

     போராட்ட இயக்கங்கள் எத்தனை இயங்குகின்றன. அவற்றின் செயல்பாடுகள் என்ன? என்னென்ன செயல்பாடுகள் செய்து போராட்டத்தை வளர்த்தன போன்றவை தெளிவாக இந்நூலில் புதிவு செய்யப்பட்டுள்ளன.

     போராட்ட இயக்கங்கள் எவ்வாறு வலுப்பெற்றன. சில இயக்கங்கள் ஏன் வலுப்பெறவில்லை. வளர்ச்சி கண்ட இயக்கங்களின் நிலை என்ன. போன்றவை விரிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் உள்ளன.

     போராட்ட இயக்கங்கள் தோன்றிய இடம், எவ்வாறு வலுப்பெற்றன போன்றவை இப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் போராட்ட இயக்கங்கள் பற்றி தெளிவாக அறியலாம்.

     சிதம்பரநாதன் கொள்கைப் பிடிப்பும், செயல்பாடும் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன.

Description

E-Book Link