இலக்கியத்தில் தமிழ் சிந்தனைகள்

     உலகத்தின் முதல் மனிதன் குமரிக் கண்டத்தில் தோன்றியவன். எனவே மனித குலம் தோன்றியது குமரிக் கண்டத்தில் தான். இதைப் பற்றி ஆசிரியர் தெளிவாக தம் கட்டுரையில் விளக்கியுள்ளார். உலகத்திற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்தவன் தமிழன். முதன்முதலில் நாகரிகமான உடை அணிந்தவன் தமிழன். உலகத்திற்குப் பண்பாட்டைச் சொல்லிக்கொடுத்தவன் தமிழன். மனித நாகரிக தொட்டிலாக விளங்கியது குமரிக் கண்டம்.

     கவிஞன் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் படைப்பவன். கவிஞனுக்கு தனிக்குணம் உண்டு. படைப்பாற்றல் உண்டு. தனிப்பண்பு உண்டு. தமிழ் கவிஞர்கள் படைத்த படைப்புகள் என்றும் மாறாதவை. மறக்க முடியாதவை. எழுத்துலகம் அவர்களை என்றென்றும் மறக்காது. அவர்களுக்கென்று தனி இடம் உண்டு. பாடம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கலைத்திட்டம் உண்டு. கலைத்திட்ட அடிப்படையில்தான் பாடம் அமையும்.

     ‘சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு’. இளங்கோவடிகள் தமிழ் மண்ணின் மகிமையை வெளி உலகிற்கு எடுத்துக்காட்ட உருவாக்கப்பட்ட காப்பியம் ஆகும். சிலப்பதிகாரம் இலக்கியம், அரசியல், பண்பாடு, கலை போன்றவற்றை வெளிஉலகிற்கு எடுத்துக்காட்டுவதாக அமையும். ‘காதலர் பிரியாமல் கவ்வுக்கை நெகிழாமல்’ என்ற வரிகள் காதலர்களைப் பற்றிய தெளிவான வரிகள் ஆகும். இதைப் போன்று எந்த இலக்கியத்திலும் வந்ததில்லை. அந்த அளவிற்கு பெருமை சேர்க்கும் வரிகள் ஆகும்.

     சிலப்பதிகார பாடல் அடிகள் பல நெகிழ்ச்சியும், உருக்கமும் வாய்ந்ததாக அமையும். சிலப்பதிகார பாடல்கள் எளிமையானவை, இனிமையானவை என்றென்றும் மனதில் பதிந்து நிற்பவை ஆகும்.

     ‘கம்பனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை’ என்று தமிழ் கவிஞன் கூறுகின்றான். ‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல்’ என்ற குறளுக்கேற்ப வாழ்ந்தவன் கோவலன். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்ற குறளுக்கு இலக்கணமாய் கண்ணகி வாழ்ந்தாள். குறள் கண்ட மணமக்களாய் இருவரும் வாழ்ந்தவர்கள். என்றென்றும் கோவலன், கண்ணகி வாழ்க்கை தமிழர்கள் வாழ்க்கைக்கு இலக்கணமாக அமைந்த வாழ்க்கை ஆகும். சிலப்பதிகார வரிகள் மங்கல வாழ்த்துடன் ஆரம்பித்து கண்ணகி தெய்வமாகும் நிலை இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

     கம்பராமாயணம் மிகச் சிறந்த விருத்தப்பாக்களால் ஆகிய இலக்கியம் ஆகும். ‘விருத்தம் என்னும் ஒண்பாவுக்கு உயர் கம்பன்’ என்று சொல்லுவார்கள். கம்பன் எழுதிய சொல் என்றென்றும் அழியாதவை. ஆக்கப்பூர்வமானவை. ஆனால், கிட்கிந்தா காண்டம், படிக்க, படிக்க ஆர்வத்தைத் தூண்டும். சொல்லின் செல்வன் அனுமன் நிலைப்பாடு விளக்கப்படுகிறது.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக