Description
E-Book Link
கவிதை என்பது ஒரு கலை. கவிதைக்கு அகராதி தேடுவது ஒரு காலம். கவிதையாலேயே அகராதி தேடுவது இந்தக் காலம்.
சிறு வயதிலிருந்தே கவிதை எழுதம் பழக்கம் என்னுடையது. அதை வளர்த்துக் கொண்டேன். கவிதை இன்பத்தை தெரியக் கற்றுக்கொண்டேன்.
இது என் கவிதை முயற்சியின் முதல் வெளியீடு. ஒவ்வொருவருடைய இதயத்திலும் இருப்பது காதல். காதல் இல்லையேல் உலகமே இல்லை. ஞானிகள் கூட காதலை அணு அணுவாக ரசித்திருக்கிறார்கள். உலகமே காதல் அலையில் நிறைந்ததுதான்.
காதலைப் பற்றி விளக்கமுடியாது. இருமனம் இணையும் காதல் திருமணத்தில் முடியும். திருமணம் முடியும் காதல் இல்லறத்தில் முடியும். காதலில் ஈடுபடுவர்களுக்குத்தான் தெரியும் உண்மைக்காதல்.
இனம்புரியாத ஒன்றுதான் காதல். அது வந்துவிட்டால் சாப்பாடு மறக்கும். உறக்கமே வராது. மீறி வந்தால் கனவு வரும். கனவிலும் அதே நினைப்புதான். படிக்காத பாமரன் முதல் வயதானவன் வரை வருவது காதல்.
காதலை சந்திக்காத மனிதனில்லை.
மனிதனை சந்திக்காத காதல் இல்லை
காதலுக்கு எதிரி மனிதனல்ல
காதல் தோற்றதென்றால் காதலித்தவன்
காதலை விட்டிருக்கலாம்
காதலி காதலை விட்டிருக்கலாம்
அவர்களின் இதயத்தில்
எங்கோ ஒரு மூலையில் இருந்து
கொண்டேயிருக்கும்.
என் முதல் கவிதைப் படைப்பை தமிழக காதலர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அது வெற்றிப்படையல் ஆக்குவது உங்கள் கையில் . . .
என்றும் அன்புடன்,
பேரா. முனைவர். கவிஞர் சா. குமரேசன்
E-Book Link