இறைநெறியும் பதிணெண் சித்தர்களும்

     இறைநெறி இறைவனைக் காண சித்தர்கள் மேற்கொண்ட பல்வேறு முறைகள் ஆகும். இறைவனைக் காண பல்வேறு முறைகளை சித்தர்கள் மேற்கொண்டனர். சித்தர்கள் இறைவனிடம் இருந்து பல்வேறு வரங்களைப் பெற்றவர்கள்.

     சித்தர்கள் இறைவன் திருவடியை அடையும் நிலையை தெரிந்து கொண்டவர்கள். உலகம் வாழ தவம் செய்பவர்கள் உலகத்தின் உண்மை நிலையைத் தெரிந்தவர்கள். பல்வேறு சித்து விளையாட்டு தெரிந்தவர்கள்.

     பல்வேறு சித்தர்கள் பூமியில் வாழ்ந்தார்கள். அதுவும் கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் ஆயிரக்கணக்கான சித்தர்கள் வாழ்ந்தனர். குமரிக் கண்டம் கடல்கொண்டபின் அவர்கள் எஞ்சிய நிலப்பகுதியில் பல்வேறு இடங்களில் வாழ்ந்தனர்.

     சித்தர்கள் மருத்துவம் மூலம் நோயைக் குணமாக்கும் மூலிகைகள் கண்டறிந்தனர். சித்தர்கள் மருத்துவம் மூலம் நோயைக் குணமாக்கும் முறையை கண்டறிந்ததால் சித்த மருத்துவம் அல்லது சித்த வைத்தியம் என்று அழைக்கப்பட்டது. சித்தர்கள் இறைநெறியை எவ்வாறு அடைந்தார்கள் என்பதை இந்நூல் விளக்குகின்றது. சித்தர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், என்னென்ன செய்தார்கள் என்பதையும் இந்த நூல் எடுத்துக் கூறுகின்றது.

     பல்வேறு சித்தர்கள் இருந்தாலும் முதன்மையான பதினெண் சித்தர்களைப் பற்றி இந்த நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக