Description
விரைவில் மின்னூலாக
திரு.ஜனனி ஜெ.நாராயணன் அவர்கள் “இறைவனைத்தேடி ஆன்மாவின் பயணம்” எனும் நூல் வெளியிடுவதறிந்து மகிழ்ச்சி.
அழியக்கூடிய… நிலையில்லாத பொய் உடலை…
நாம் மெய் என அறியாமையில் உழன்று, அதன் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் மற்றும் அழகுபடுத்துவதற்கும் நம் முழு வாழ்நாளை செலவிட்டு வீணாக்குகிறோம்.
ஆனால்… நம் ஆன்மா வீற்றிருக்கின்ற இந்த உடல் ஒருநாள் அழிந்து போகும். ஆனால் நம் ஆன்மா அழிந்தா போகிறது…. என்கிற இந்த உண்மையை நமக்கு யாரும் போதிய அளவு போதிக்கவில்லை…… போதித்ததில்லை……
எனவே இந்த ஆன்ம சிந்தனை ஏதுமின்றி புற அழகிற்கு முக்கியத்துவம் கொடுத்து உடலையே முக்கியமாகக் கருதி நம் வாழ்நாளைப் பாழாக்குகிறோம்.
இறையருளை அடைவதற்காக வேண்டியே…..
இந்த உடலின் உருவம் கொண்டு இவ்வுலகில் பிறந்துள்ளோம்
என்பதனை உணர்ந்து இறைவனை நோக்கி நமது ஆன்மா பயணிக்க வேண்டும்.
இந்த பேருண்மையை உணர்த்துதல் பொருட்டு இந்நூல் வழி நூலாசிரியர் முயற்சி செய்தது பாராட்டிற்குரியது.
மேலும் மாணிக்கவாசக பெருமான் இயற்றிய சிவபுராணத்திற்கு எளியவரும் புரிந்து கொள்ளும் வகையில் பொருள், இந்நூலில் இடம் பெறுவது சிறப்பிற்குரியது ஆகும்.
இந்நூலினை அனைவரும் படித்து இறைநிலையடைய முயற்சித்து இக, பர, சுகம் பெற இறையருள் புரியப் பிராத்திக்கிறோம்.
– தவத்திரு சுவாமி.
சைதன்யானந்த மகராஜ்
தலைவர், விவேகானந்தா ஆசிரமம், வெள்ளிமலை.
விரைவில் மின்னூலாக