கிரேக்க காதல் கவிதைகள்

     கவிதை ஆற்றல் கொண்ட மனிதர்கள் தாங்கள் உணர்ந்த, அனுபவித்த காதல் உணர்வுகளை, காவியமாகவும் கவிதைகளாகவும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது காதல் உணர்வின் வெளிப்பாடுகள் அவர்களைப் போலவே காதல் வயப்பட்ட, ஆனால் தங்கள் உணர்வைக் கவிதையாக வெளிப்படுத்த இயலாத சராசரி மனிதர்களுக்கு மாபெரும் வரப்பிரசாதமாகவே அமைகின்றன. அத்தகைய கவிதைகளைப் படிக்கும் சராசரி மனிதர்கள் தங்கள் உணர்வின் வெளிப்பாடாகவே மற்றவர்களின் கவிதைகளையும் மதிக்கின்றனர், ரசிக்கின்றனர்.

     வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த கவிஞர்கள் வெவ்வேறு மொழிகளில் தங்களது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தாலும் கூட, கருத்தளவில் பெரும்பாலான கவிதைகள் ஒருமைப்பட்டே உள்ளன. அடிப்படையில் மனித உணர்வுகள் ஒன்றேதான் என்பதற்கு இது ஒரு நிதரிசன எடுத்துக்காட்டாகும்.

     இந்நூலில் பழமையான “கிரேக்க காதல் கவிதைகள்” இடம் பெற்றுள்ளன. நாடோடி இலக்கியம்போல பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு கவிஞர்கள் தங்களது அனுபவங்களை, அனுபவித்த மகிழ்ச்சிகளை துயரங்களை கவிதைகளாகப் பதிவு செய்தவற்றைத் தொகுத்துள்ளனர். அவற்றை இனிமையாக எளிமையாகத் தமிழில் தந்துள்ளார் பேராசிரியர் ராஜ்ஜா. ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆழமான புலமை கொண்டுள்ள அவரது இந்தப் படைப்பு அனைவருக்கும் மகிழ்வளிக்கும் என்பது உறுதி.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக