இனியேனும் பகையோம்… (உறவாடும் கவிதைகள்)

உயரின உறவுகளே

     நலமும், மகிழ்வும், அமைதியும் முத்தமிழாய் நிலைக்க வாழ்த்துகிறேன்.

     ‘இனியேனும் பகையோம்….. (உறவாடும் கவிதைகள்)‘ நானெழுதி வி.பி.எக்ஸ். பதிப்பகம் வெளியிடும் மூன்றாவது கவிதை நூல். இன்னும் தொடரலாம்.

     ஆசிரியர் பணி ஓய்வில் 20 ஆண்டைக் கடந்த முதியவன். தள்ளாடும் உடல், தடுமாறும் கைகள், தன்னுறவிலே நிலைப்பவன். எழுதுவதே மகிழ்ச்சி. என்றாலும் நடைமுறைகளை வெளிப்படுத்த முடியாத பலநிலைகளிலும் எழுதுகிறேன்.

     முதிய என் நடைமுறைக் கருத்துகளை உயரின உறவுகளுடன் நமது சந்ததிகள் அறியவுமே எழுதுகிறேன். காலமும் நெருங்குது, நெருக்குது.

     எல்லோருமே ஏற்றுக் கொள்ளும் கருத்துகள் என்னிடம் இல்லை. எல்லோரும் அறியும் கருத்துகள் ‘உறவாடும் கவிதைகளில்‘ காணலாம்.

     இத்துடன் உன் படைப்புகள் பலவும் வி.பி.எக்ஸ். பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் வெளியாகும். பதிப்பகத்தாருக்கு நன்றி! நன்றி!!

     உயரின உறவுகளே! தவறைக் கூறுங்கள். சரிசெய்து கொள்கிறேன்.

     வாழ்க்கை முழுவதும் படிப்பும், பயிற்சியுமே! நன்மைகளுக்காய் தேர்வு செய்து படியுங்கள்! படியுங்கள்.

வாழ்த்துக்கள்!

என்றும் நாமாய்

எம். ஏ. தேவதாசன்.

Category: Tag:

Description

E-Book Link