இன்னுமொரு தமிழ்ச்சங்கம்

     கவிஞர் கு. சுயம்புலிங்கம் படைத்துள்ள மூன்றாவது கவிதை நூலான “இன்னுமொரு தமிழ்ச்சங்கம்” என்னும் எழுச்சிமிக்க கவிதைக் களஞ்சியத்தைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். கவிஞரின் ஆழ்ந்த ஆய்வுத் திறனும், உணர்ச்சி மிகுந்த கவி ஓட்டமும் படிப்பவர் உள்ளத்தில் சிறந்த தமிழ் உணர்வைத் தோன்றச் செய்யும் உந்துதலும் தெளிவாகப் பளிச்சிடுகின்றன.

     இக்கவிதை நூலில் பலதிறக் கருத்துக் கோவைகளும் நான், நீ என்று முந்திக்கொண்டு படிப்பவர் உள்ளங்களைப் பரவசப்படுத்தும் என்று கூறலாம். இத்தகைய அருமையான கவிதை நூலைப் படைத்துத் தமிழர் உள்ளங்களைத் துயிலினின்றும் தட்டி எழுப்பித் தாய்மொழிப் பற்றும், ஆர்வமும் ஏற்படத் தூண்டும் கவிஞர் கு. சுயம்புலிங்கத்துக்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியன.

– பேராசிரியர் பொ. முத்தரசு

Category: Tag:

Description

E-Book Link