ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை

     ‘ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை‘ என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை அவர்கள் ஒரு அரசியல் புத்தகத்தினைக் கொண்டு வந்துள்ளார். இருபத்திரண்டு தலைப்புகளில் அரசியல் சார்ந்த கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஊடகத் துறையிலான அவரது நாற்பதாண்டுகால அனுபவம் பளிச்சிடுகிறது. அதேபோல ஒவ்வொரு கட்டுரையிலுமே ஒரு அரங்கமே கூடி விவாதிக்க வேண்டிய அளவுக்கு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

     அரசியல் என்பது சமுதாய வளர்ச்சியில் ஒரு முக்கியமான அமைப்பு ஆகும். ‘மனிதன் ஓர் அரசியல் தெரிந்த மிருகம்’ என இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கத் தத்துவமேதை அரிஸ்டாட்டில் கூறினார். எனவே மனித வாழ்க்கையிலிருந்து அரசியலை அகற்றிவிடமுடியாது. பொருளாதாரத்தில் மாறுதல் செய்வதற்குக்கூட அரசியல் தேவைப்படுகிறது.

     தேர்தலுக்குத் தேர்தல் மக்களாட்சி என்ற குழந்தையின் மீது படிந்துள்ள அரசியல் மாசுகளைப் போக்கித் தூய்மையான ஆடைகளை அணிவிப்பதற்கான வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது. ஆனால் அதை மக்கள் செய்கிறார்களா என்பதே கேள்வி.

     இந்தப் புத்தகம் அரசியல் தொடர்பான விழிப்புணர்வையும் பல்வேறு கேள்விகளுக்கான தீர்வையும் சொல்லியுள்ளது.

Description

விரைவில் மின்னூலாக