கலைமதி (கவிதை நாடகம்)

     கவிஞர் திரு. கு. சுயம்புலிங்கம் இயற்றிய கலைமதி கவிதை நாடகம் படிக்கத் தொடங்கிய பின்னர் முடியும்வரை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சிந்தனையிலிருந்து மீளமுடியவில்லை.

     “எதுவரைக்கும்?” என்ற கவிதை, மான்விழியில், இந்து நுதலில் கோதை குழலின் – என அடுக்கிய பின்னர், கையில் இருக்கும் பணம் வரைக்கும், மெய்யில இருக்கும் பலம் வரைக்கும் – என முடித்தது சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது.

     “முள்ளை விதைத்தவன் எள்ளை அறுப்பது என்றும் நடவாது, வெறும் பாலையில் விதைத்த வித்து முளைத்த சரித்திரம் கிடையாது” என்ற சொற்றொடர் புதியதாகவும், சிந்திக்கத் தூண்டும் கவிதையாகவும் மலர்ந்துள்ளதைப் பாராட்டலாம்.

     காதலைப் பற்றி மிக உயர்வாக எழுதியுள்ளார். உருவும் பொருளும் காதலுக்கில்லை, அழகும் அறிவும் காதலுக்கு இல்லை. காதலே தெய்வம், காதலே எல்லாம், விந்தை காதலே வாழ்க, வெல்க என முடித்துள்ளது மனதை நெருட வைக்கின்றது.

     கவிஞர் கு. சுயம்புலிங்கம், கவிஞருள் திலகம்! கலைமதி நாடகம் கலையின் மகுடம்.

– புலவர் பொன். தெய்வசோதி

Category: Tag:

Description

E-Book Link