காலம் – காற்று – காதல் (கவிதைகள்)

     உயிர்க்கலைகளில் உயர்வானக்கலை காவியக்கலை, காவியம் கவிதைகளால் அமைவது ஆகும். மொழிநூல் அறிஞர்கள் அனைவருக்கும் கவிதை எழுதும் ஆற்றல் அமைவதில்லை. கலை என்பது மரபு வழியாகவும் அமைவதில்லை. இயற்கையாக ஒருசிலருக்கு ‘இயற்கை வழங்கும் கொடையாக’ அமைவதே கவின் கலையாகும். அந்த வகையில் இந்நூலாசிரியர் முனைவர் த. செல்வராஜ் அவர்கள் கருவிலே திருவுடையவராக விளங்குகிறார்.

     தாவர இயலில் முனைவர் பட்டம் பெற்றுப் பேராசிரியராகப் பணியேற்றவர் என்றாலும் அவரது சிந்தையிலும் உணர்வுகளிலும் மேலெழுந்து காணப்படும் மொழிநூல் புலமையேயாகும். தமிழில் சிறந்த ஆற்றலும் அறிவும் பெற்ற இவர் கவிதைத் தொழிலை உயிர்மூச்சாகக் கொண்டுள்ளார்.

     மரபுக் கவிதையில் தனது எண்ணச் சிறகைவிரித்து கற்பனை உலகில் பறப்பதில் நிகரற்றவராகவே காணப்படுகிறார். இவரது ‘காலம் – காற்று – காதல்’ எனும் கவிதைத் தொகுப்பில் அமைந்துள்ள அனைத்துக் கவிதைகளும் மாணிக்கப் பரல்களாக ஒளிவிடுகின்றன.

     இவர் படைத்து முழுமைப்படுத்தி வைத்திருக்கும் இராமாயணக் காவியம் (சுமார் 20,000 கவிதைகள்) வெகு விரைவில் வெளிவந்து, தமிழ்த்தாயின் ஆபரணமாய் ஜொலிக்கும் நாள் தொலைவில் இல்லை!

     நாங்கள் ‘இளங்கம்பன்’ என்று செல்லமாய் அழைக்கும் இவரை, தமிழ்கூறும் நல்லுலகம் விரைவில் அறிந்து, ஆரத்தி எடுத்து போற்றப்போவது திண்ணம்!

Category: Tag:

Description

E-Book Link