கனவில் வந்த காதலி (கவிதைகள்)

     ‘கனவில் வந்த காதலி’ என்ற இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியனாகிய இச்சிறியேன், இதற்கு முன்னர் காலம்-காற்று-காதல், செல்வராமாயணம் – குமரிக்கண்டகாலம், செல்வராமாயணம்- வசந்த காலம் என்று சில கவிதை நுால்களை வெளியிட்டிருந்தாலும் எழுத்துலகிற்குப் பெரிதும் அறிமுகமில்லாத, முறைப்படியே தமிழும் கல்லாத, ஒரு தாவரவியற் கவிஞனாகவே எனது சுய அறிமுக உரையை எழுதுகிறேன்.

     ‘கனவில் வந்த காதலி’ என்ற இக்கவிதைத் தொகுப்பில் உள்ள பெரும்பான்மைக் கவிதைகள் எனது இளங்கலை முதல் ஆய்வுக் கல்வி வரையிலான காலகட்டத்தில் எழுதிய எனது ஆரம்ப எழுத்து வடிவம் ஆயினும் அவ்வமயம் என்னுள் எழுந்த எண்ண ஓட்டங்களின் உண்மையைப் பறை சாற்றுவதாக இத்தொகுப்பு அமையுமெனக் கருதுகிறேன். கவியுலகம் இக்கவிதைத் தொகுப்பினை வேண்டுமாறும், குற்றம் குறைகளைப் பொறுத்தருளுமாறும் வேண்டுகிறேன்.

     பெருந்தொற்று நோய் பரவும் காலகட்டதில் வெளியிடும் கவிதைத் தொகுப்பு என்பதால் அணிந்துரை, வாழ்த்துரை யாவும் கவிப் பெரியோரிடம் கேட்டுப் பெற இயவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

     நேர்மையாக, உண்மையாகக் காதலித்த அனைத்துக் காதலரின் உள்ளங்களுக்கும் இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்.

நன்றி!

 என்றும் அன்புடன்,

 த. செல்வராசன்.

Category: Tag:

Description

E-Book Link