கண்மணி பாப்பா (சிறுவர் இலக்கியம்)

     சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்குச் சீரிய தொண்டாற்றி வருபவர் கவிஞர் கு. சுயம்புலிங்கம் அவர்கள். தலைசிறந்த கவிஞராகவும், சிந்தனையாளராகவும், சீர்திருத்தவாதியாகவும் விளங்குபவர் அவர். தமிழ்ப்பற்று மிக்கவர் அவர். இவரது கண்மணி பாப்பா சிறுவர் சிறுமியர்க்கு அல்வாத் துண்டுகளைப் போல் இனிக்கும் பாடல்களைக் கொண்டது. உணர்வியல், வாழ்வியல் என்னும் இருப்பகுதிகளாக அமைந்து இன்பம் பயப்பது. தமிழ்ப்பாவை, கலைமதி (கவிதை நாடகம்), இன்னுமொரு தமிழ்ச்சங்கம் என்னும் தமது நூல்களால் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நன்கு அறிமுகமானவர் கவிஞர் கு. சுயம்புலிங்கம். “கண்மணி பாப்பா” நூலில் இவரது தமிழ்ப்பற்றும், சீர்திருத்த உணர்வும், இலக்கியப் புதுமையும் நன்கு புலனாகின்றன.

– பேராசிரியர் முனைவர். அ. பாஸ்கர பால்பாண்டியன்

Category: Tag:

Description

E-Book Link