கன்னியாகுமரி சித்தர்கள்

     சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.

     ‘சித்தர்கள்’ பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். 18 சித்தர்கள் பற்றி பல தகவல்களை நாம் அறிந்திருப்போம்.

     அவ்வகையில் குமரிமாவட்டத்தை சார்ந்த, வாழ்ந்த, பயணித்த சில சித்தர்களின் தொகுப்பே இந்நூல். மொத்தம் 11 சித்தர்கள் பற்றிய தகவல்களை இந்நூல் மூலம் அறியலாம். அதில் ஒரு பெண் சித்தரும் அடங்வார். மதங்களைக் கடந்த சித்தர்களும் இதில் அடங்குவர்.

     குமரி மாவட்டத்தில் ‘தமிழாலயம்’ நிறுவி பல படைப்பாளிகளையும், படைப்புகளையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் புலவர் கு. பச்சைமால். சிறந்த பண்பாளர், செயல்திறன் மிக்க தமிழ் படைப்பாளி. அன்னாரின் சீரிய முயற்சியே இந்நூல்.

Category: Tags: ,

Description

E-Book Link