Description
விரைவில் மின்னூலாக
உயரின உறவுகளே!
வாழ்த்துகள்! நலமும், மகிழ்வும் நமக்கே!
‘கருத்துப் பொட்டலம்’ என்ற நூலை எழுதினேன். வெளியிட்டதில் ‘அருமையென’ பதிவிட்டு, பெருமை சேர்த்தீர். மகிழ்ச்சி! நன்றி!!
‘கருத்துச்சுவைகள்’ என்னும் இன்னொரு நூலாக ‘கருத்துப் பொட்டலத்தின்’ இரண்டாம் பகுதியாக எழுதினேன்.
இரு நூல்களுமே கண்ட, கேட்ட, படித்த, பார்த்த, அறிந்த அனுபவ நிகழ்வுகளையும், நடைமுறை நிகழ்வுகளையும் எளிமையான சொற்களில் எல்லோரும் படித்துணர விரும்பினேன். இத்துடன் இயற்கை ஈவுகளையும், அண்டத்தின் பெருமைகளையும் ஆய்ந்தறிவாய் உங்களோடு ஒன்றுபட எண்ணினேன்.
தள்ளாத வயது, தனியான உறவு, எழுதுவதில் தாகம், பகிர்வதில் மகிழ்ச்சி. வருங்கால சந்ததிகள் உணர்ந்திடவும், உயர்ந்திடவும் மனதார வாழ்த்தி, பதிவுகளின் நன்மையே நமக்குதவி என பதித்துள்ளேன்.
நாமே உயர்வு!
அன்பன்,
எம்.ஏ.தேவதாசன்.
விரைவில் மின்னூலாக