கவிச்சக்கரவர்த்தி கம்பர்

     கம்பராமாயணம் இதிகாசங்களில் முக்கியமானது. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்று சொல்லுவார்கள். “தமிழுக்கு கதி கம்பரும், திருவள்ளுவரும்”, “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர்கம்பன்” என்று சொல்லுவார்கள்.

     கம்பரைப் போல் விருத்தப்பாக்கள் எழுதியவர்கள் எவரும் இல்லை. ‘கம்பன்பாட்டு நறும்பாட்டு, மற்றவர் பாட்டு வெறும்பாட்டு’ என்று சொல்லுவார்கள். கம்பன் இல்லையேல் இராமாயண காவியமே இல்லை.

     கம்பருடைய வரலாற்றை ஆசிரியர் களஆய்வு செய்து எழுதியுள்ளார். அயோத்தியின் அரசியல், சமூகம், பொருளாதாரம் போன்றவை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

     நூலாசிரியர் கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்ற நூலை எளிய நடையில் எழுதியுள்ளார். கம்பரைப் பற்றி அறிய வேண்டுமென்றால் தெளிவாகவும், விளக்கமாகவும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் எல்லோர் கையிலும் இருக்க வேண்டிய நூலாகும்.

Description

E-Book Link