காவிரி நாடன் காதலி (வரலாற்று நாவல்)

     தேனும் தினையும் கலந்து தின்றால் சுவை எவ்வாறு இனிமையைத் தருமோ அவ்வாறு வரலாற்றுடன் தமிழ் உணர்வைக் கலந்து நமக்கு இன்பத் தேன் வழங்குகிறது இந்த நாவல். இந்த இன்பத் தேனுக்கு மேலும் இனிமையைத் தரும் வகையில் காதலையும் கற்பனையையும் கலந்து இனிமையின் எல்லையைக் கடந்து பேரின்பத்தை வழங்கும் வகையில் அமைத்துள்ளார் தமிழுலகன்.

     கவிஞராகத் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகம் ஆன தமிழுலகன் இந்த நாவலின் வாயிலாக சிறந்த நாவலாசிரியர் என்னும் தகுதியைப் பெறுகிறார். கற்பனைச் சிறகை விரித்தபடி எழுதும் நாவலாசிரியரை விடவும் வரலாற்று நாவலாசிரியருக்குப் பொறுப்பு அதிகம். அந்தப் பொறுப்பான வரலாற்று நாவலாசிரியர் பணியை நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கிறார் தமிழுலகன்.

     “காவிரி நாடன் காதலி” என்னும் தலைப்பைப் பார்த்தவுடன் இது காதலை மையமாகக் கொண்ட நாவல் என்று கருதினால் நாம் ஏமாந்து போவோம். இது காதலை மையமாகக் கொண்ட நாவல் மட்டும் அல்ல. தமிழை மையமாகக் கொண்ட நாவல்; தமிழனை மையமாகக் கொண்ட நாவல்; தமிழாட்சியையும் மாட்சியையும் மையமாகக் கொண்ட நாவல். இந்தத் தமிழ் உரைநடைக் காவியத்தைப் படைத்துள்ள தமிழுலகனை எவ்வளவு போற்றினாலும் தகும். இந்தத் தமிழுலகனைத் தமிழுலகம் போற்றும்.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக