உடல்நலத்திற்கான கீரை வகைகளும் சமைக்கும் முறைகளும்

‘உணவே பிரமன், உணவிலிருந்தே எல்லா உயிரினங்களும் தோன்றுகின்றன. உணவாலே வாழ்கின்றன். இறந்த பிறகு மற்ற உயிரினங்களுக்கும் உணவாக மாறுவதே இயற்கையின் இயல்பு’ என உபநிஷத்துகள் கூறுகின்றன. ஏழைகளிடத்தில் இறைவன் உணவின் வடிவமாகத் தோன்றுகிறார் என்கிறார் காந்திஜி. நாம் வாழ உணவு அவசியம்.

இன்றைக்கு நாம் உண்ணும் உணவு எத்தகையது? யோசித்துப் பாருங்கள். இன்றைய நோய்களின் “வளர்ச்சிக்கு” உணவுப் பழக்கம் பிரதான காரணம். நாம் நம் தட்பவெட்ப நிலைக்கு, கலாச்சாரத்துக்கு ஒவ்வாத பிறநாட்டு உணவுகளை ரசித்து சாப்பிட்டு நமது உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்டு வருகிறோம். அறிவியல் முன்னேற்றம் அடைந்து சிறப்பாக மருத்துவப் புரட்சி நிகழ்த்தி வருகிறது. அதே சமயம் புதுப்புது நோய்களும் மனித குலத்திற்கு அச்சுறுத்தலை அளித்து வருகிறது. நம் உடல்நலத்தைப் பேணவேண்டிய உணவானது, உடல்நலக் கேடினையும், செலவினையும் ஏற்படுத்துகின்றன என்பது எவ்வளவு முரண்பட்ட விஷயம்.

நம் முன்னோர்கள் நோய் வராமலிருக்கும் வழிமுறைகளைச் சிந்தித்து நம் அன்றாட உணவு பழக்க வழக்கங்களிலேயே நோய் வருமுன் காப்பதற்கும், வந்ததற்குப் பின் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளைப் பலநூறு ஆண்டுகளுக்கும் முன் பதிய வைத்ததை நாம் மறந்துவிட்டோம். எளிதாகக் கிடைக்கும் கீரைகள் நம் உடலுக்கு அளிக்கும் ஆரோக்கியம் குறித்து நாம் அறிந்தும் பயன்படுத்தாமல் இருக்கிறோம்.

உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியமானது. கீரைகளில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரையை சேரத்துக் கொள்வது அவசியம். எளிதாக நமக்குக் கீரை கிடைப்பதால் அதன் மகத்துவத்தை நாம் போற்றுவதில்லை. கீரை வகைகள், அவற்றின் தன்மைகள், பயன்கள் ஆகியவற்றை அனைவரும் புரிந்து, அதற்கேற்றாற் போல் அன்றாட உணவை உட்கொண்டால் நோய் என்பதற்கே இடமில்லை.

இந்தப் புத்தகத்தில் கீரைகளின் இயல்புத்தன்மை, அதில் அடங்கியுள்ள சத்துகள் என்னென்ன, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம், கீரையை எப்படி சமைப்பது என்பன உட்பட பல்வேறு பலன்கள் விளக்கப்பட்டுள்ளன. கீரைச் சமையல் குறித்து ரசனையோடு ருசியாக செய்துகாட்டி அசத்தியிருக்கிறார்கள்.

அரசியல், சமூகம், பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிவரும் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் கீரை குறித்து எழுதி வைத்திருக்கிறார் டாக்டர் ஹனிமன். இந்தப் புத்தகம் வாசிக்கமட்டுமல்ல, ஒவ்வொருவரது வாழ்க்கைக்குமானது.

Description

விரைவில் மின்னூலாக