கொள்ளைக்காரர்கள்

     கொள்ளைக்காரர்கள் மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாக்குமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றிய கதை இது.

     1973 இல் குமரி மாவட்டத்திலும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் – ஏன், இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளிலும்கூட உணவுப் பொருட்களுக்காகப் பெரும் போராட்டங்கள் நடந்தன. அவற்றில் அரசியல் கட்சிகள் நடத்தியவையும் உண்டு. கட்சி சார்பற்ற ஏழை ஜனங்கள் பொறுமையிழந்து தங்களுக்கு தெரிந்த முறையில் நடத்தியவையும் உண்டு. இப்புனித போராட்டங்களில் ஈடுபட்டுக் கொடிய இன்னல்களுக்குள்ளான உழைக்கும் மக்களின் தியாகத்துக்கு இதனைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்.

     ஒரு நாட்டின் சட்ட திட்டங்கள் ஒழுங்காக இல்லையானால் அதைப் பின்பற்றும் மனித சமுதாயமும் ஒழுங்காக இயங்காது. பலாத்காரம் ஏன் ஏற்படுகிறது? போராட்டங்கள் உண்டாக யார் காரணம் என்பதையும் பத்தாம் பசலிச் சட்டங்கள் உடைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் காட்டும் அற்புதமான நாவல்.

Category: Tag:

Description

E-Book Link