குமரிக் கண்டம்

     தென் இந்தியாவில் குமரிக் கண்டத்தில் உள்ள புழு பூச்சி வகைகள் குமரிக் கண்டத்திலும் இருந்திருக்கிறது. மனிதனின் தோற்றம் அங்குதான் இருந்திருக்கிறது.

     மனித நாகரீகத்தின் பண்பாடுகள், வளர்ச்சி போன்றவை இங்குதான் நிகழ்ந்திருக்கின்றது. “பஃறுளியாற்று பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்கிறது சிலப்பதிகாரம்.

     தமிழர்களின் எண்ணங்கள் வண்ணங்களாக மலர்கின்றன. உலகத்திற்கு பண்பாட்டைக் கற்றுக் கொடுத்தவன் தமிழன். வாழும் கலையை தெரிந்து கொண்டவன்.

     குமரிக் கண்டம் இன்று இந்தியப் பெருங்கடலில் ஆழப்புதைந்து கிடக்கும் பகுதி ஆகும். 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இன்றைய குமரிக் கண்டம் (அன்றைய இலெமூரியா கண்டத்தின்) பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மனிதன் நடந்தே சென்றிருக்கிறான்.

     குமரிக் கண்டத்தின் எஞ்சிய பகுதி 10% கன்னியாகுமரி மாவட்டமாக மாறியுள்ளது. 90% பகுதி கடலுக்குள் அமிழ்ந்து காணப்படுகிறது.

     இந்த நூல் குமரிக் கண்ட ஆய்வு நூல் ஆகும். கா. அப்பாத்துரையார் எழுதிய குமரிக்கண்டம் என்ற நூலை முதன்மை நூலாக கொண்டு எழுதப்பட்டது.

     இது மூலநூலின் வழி நூலாகும். மிகச் சிறந்த வரலாற்று நூல் ஆகும். குமரிக் கண்டம் இருந்ததற்கான ஆதார நூல் ஆகும். இது தமிழர்கள் கையில் இருக்கவேண்டிய நூலாகும்.

Description

E-Book Link