குற்றங்களே நடைமுறைகளாய்…

     நம்மைச் சுற்றி நிகழும் மனித பண்புகளுக்கு எதிரான இந்தச் செயல்களில் மனம் பதைத்து, நமக்கிருக்கும் இந்த ஒரே மண்ணையும், நமக்கு வாய்த்திருக்கும் இந்த ஒரே வாழ்வையும் பாதுகாத்து, வாழத் தகுந்த நிலையில் வைக்கப் பலர் பல வழிகளில் முயன்று வருகிறார்கள். ப. திருமலை அவர்கள் அப்படிப்பட்டவர்களில் முதன்மையான ஒருவர். நன்கு கற்றவர். வயிற்றுக்கு இரை தேடும் தொழிலைத் தவிர்த்து, வாழ்வை மேம்படுத்தும் தொழில் தேடி, இதழியல் துறைக்கு வந்தவர். நம் மண்ணையும், நமக்கு வாய்த்திருக்கும் இந்த ஒரே வாழ்வையும் பாதுகாத்துச் சிறப்பானதாக்குவதர்காக நிறைய எழுதி வருகிறார். பேசி வருகிறார். உழைத்து வருகிறார். பல நூல்கள் ஏற்கெனவே எழுதி வெளியிட்டிருக்கிறார்.

     மக்கள் நீதிக்காகக் காலமெல்லாம் உழைத்த நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் விருது உட்படப் பல உயர் விருதுகளைப் பெற்றவர் நம் ப. திருமலை. தன் சமூக ஆதங்கங்களைக் கட்டுரைகளாக்கி, உங்கள் முன் வைத்திருக்கிறார் அவர். இப்பிரச்சினைகளை நோக்கி உங்கள் மனசாட்சியைத் திருப்புவதற்காக “குற்றங்களே நடைமுறைகளாய்” என்னும் நூலின் மூலம் முயன்றிருக்கிறார். ஏதாவது செய்வீர்களா என்று எதிர்பார்க்கிறார். செய்வீர்கள் என்று நம்புகிறார்.

     இந்த நூலைத் திறந்த மனதோடு வாசியுங்கள். நிச்சயமாக உங்கள் மனித நேய உணர்வு அதிர்வடையும். உங்களைத் தூண்டும். தனித்தோ, பலரை இணைத்தோ, ஏதாவது செய்ய உங்களை ஊக்கப்படுத்தும். நிச்சயமாக வினையாற்றும்.

Description

விரைவில் மின்னூலாக