மாதவத்தில் நான் (கேள்வியும் பதிலும்)

     மாதவம் தொடங்கப்பட்டதன் நோக்கம் உறவுநிலை பிணைப்பு என்ற அடிப்படையில்தான்.

     அந்தப் ‘பிணைப்பு’ என்னை எப்படிப்பட்ட தொடர்பு எல்லைக்கு அழைத்துச் சென்றது என்பதை எண்ணிப் பார்க்கையில் பூரிப்புணர்வு என்னைவிட்டு அகல மறுக்கிறது.

     ஒரு சந்தர்ப்பத்தில் கவிஞர் கு. சுயம்புலிங்கம் அவர்களின் தொடர்பு கிட்டிய தருணத்தில் மாதவ இதழின் முதன் இதழில் இரண்டாவது பக்கத்தில் அவரது கவிதை ஒன்றை பிரசுகரித்து மகிழ்ந்தோம்.

     சிறிது காலத்தில் எங்களின் நட்பானது தமிழுக்கான பணியைச் செய்யவேண்டும் என்ற ஈர்ப்பாக மாறியதில் ஆச்சரியமில்லை.

     அவரது கட்டுரைகள், கவிதைகள் அலங்கரித்துக் கொண்டிருந்த வேளையில் கேள்வி – பதில் பற்றிய கோரிக்கை எழவே ஒரு சாதாரண கேள்வி பதிலிலிருந்து மாறுபட்டுச் செய்யலாம் என்று தோன்றிய வேளையில் அதற்கு ஓர் இன உணர்வாளனின் பதில்தாம் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றிய வேளையில் ‘கவிஞர் கு. சுயம்புலிங்கம் பேசுகிறார்’ என்ற அறிவிப்பு ஒன்றை வைத்த வேளையில் அருமையான கேள்விகள் தமிழ்கூறும் நல்லுலகில் இருந்து வந்து குவிந்தன.

     ஒவ்வொரு கேள்விக்கும் ஓர் ஆய்வாளனின் நோக்கில், பேராசிரியரின் விளக்கத்தில், ஒரு கவிஞனின் வரிகளாக அவர் விளக்கங்களாக தந்தபோது இந்த தமிழ் கூறும் நல்லுலகம் மெய்சிலிரித்து நின்றதை கண்ணுற்றபோது மாதவம் அடைந்த பெருமை சொல்லிமாளாது.

     நாங்கள் ரசித்த, இன் தமிழ்கூறும் நல்லுலகம் எழுந்து நின்று ஆர்பரித்து கைதட்டி பரவசமடைந்த கேள்விபதில்கள் நூல்வடிவு பெற்றிருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.

சிவ. அய்யப்பன்

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக