மனம்போல எண்ணுகிறோம்! (காலங்கள் விதைப்பவை)

உயரின உறவுகளே!

     நலமும் மகிழ்வும் நமக்குள் உறைய வாழ்த்துகிறேன்.

     ‘யாரும் ஊரே யாவரும் கேளிர்’ என்றார் மாமனிதர் பூங்குன்றனார்.

     ‘உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் மூழ்கிக் கிடக்கிறது’ என்றார் உலக ரட்சகர் ஏசுபிரான்.

     தெளிந்தார் உரைகள் தேவையின் கண்களல்லவா?

     அறிவினமே! முப்பது கோடி உயிரினங்களில் உயரினமே! சிந்திப்பதே, சிறப்பினத் தகுதி. சிந்திப்பீர்! உண்மையும் நன்மையும் நலிந்தழியும் காலமிது. பணம் எல்லாத் தீமைக்கும் வித்தாகிவிடப் பலன்களை விருந்துபோல் விளைத்திடும் பொற்காலமிது. ‘அமைதி’ பொருளற்றுப் புதைந்துள்ளது. இலவசத்திலும், தள்ளுபடியிலும், வியாபார நோக்கில் விளம்பரத்து முதன்மையில், பதவி, பணம், முதன்மை பெற்றிடும் இந்நாட்களில் – அறிவினமே! சிந்திப்பீர்! உழைக்காமல் உண்ணலாகா!

     இயற்கைப் பேரழிவுகள் – அணுவியல் வலிமை – ஆதிக்கப் போர்கள்- இனமத வெறியாட்டங்கள்- கொள்ளை நோய்ப் பரவல்கள் – கல்வியிலும் மருத்துவத்திலும் பெருங்கொள்ளை – கலப்பட வியாபார ஒவ்வா நிலை என எண்ணற்ற, ஒழுங்கற்ற நிர்வாக நடைமுறைப்பதிவுகள்.

     எனது கருத்துகளை எளிதில் உறவுகளுள்ளத்தில் சேர்த்திட எளிய நடையில், என் கவிதைகள் பயனளிக்குமென்ற நம்பிக்கையில் எனது கவிதைப் புத்தகமான ‘மனம்போல எண்ணுகிறோம்! (காலங்கள் விதைப்பவை) என்ற நூல் வெளியிடப் பட்டுள்ளது.

     திறமையானவர்கள், அனுபவ ஆய்வுகளில் தெளிந்தவர்கள் கருத்துக்களைப் படித்துச் சிந்தியுங்கள் – படியுங்கள் – புத்தக பதிவுகளிலே புதையல்கள் இருக்கின்றன – படித்தாலே தெரிந்துகொள்வீர்கள்! வாழ்வில் உயரலாம்! மகிழலாம்!

உறவோன்,

எம். ஏ. தேவதாசன்.

Category: Tag:

Description

E-Book Link