மனவாசல் தீபங்கள்

     ராஜ்ஜா என்கிற ஒரு எழுத்தாளரின் மனவாசலில் யார் யார் நிற்கிறார்கள்? எதனால் நிற்கிறார்கள்? என்று கிழக்குவாசல் உதயம் திங்கள் இதழில் 2015 ஜனவரித் திங்கள் முதல் 2016 ஜூன் திங்கள் முடிய ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதி வந்தார் பேரா. ராஜ்ஜா.

    ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரை பாராட்டியதாக சரித்திரம் உண்டா? ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனை உயர்வானவன் என்று போற்றியதுண்டா?

     இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொரு படைப்பாளிக்கும் கவிஞனுக்கும் தான் மட்டுமே ஆகச் சிறந்த படைப்பாளி, ஒப்பற்றக் கவிஞன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். வேறு எந்த சக படைப்பாளியையும் சுலபத்தில் ஏற்றுக் கொள்ளாத அங்கீகரிக்காத ஒருவித இறுமாந்த மனநிலை இருக்கும். இந்தவித படைப்புக்காய்ச்சல் இல்லாத ஒருசிலர் அங்கொருவர் இங்கொருவர் விதிவிலக்காக உண்டு. அந்த ஒரு சிலரில் பேராசிரியர் ராஜ்ஜா அவர்கள் முதன்மையானவர்.

     மேலும் புதுச்சேரி பற்றிய பல அரிய செய்திகளை போகிறபோக்கில் தன் கட்டுரைக்கிடையில் சொல்லிச் செல்கிறார்.

     பாதிக்குமேல் புதுச்சேரி வாழ் எழுத்தாளர்கள்தான் இந்த நூலை அலங்கரித்திருக்கிறார்கள். அதன் மூலம் புதுச்சேரியைச் சேராத பலர் புதுச்சேரி பற்றி அறியாத பல அரிய தகவல்களை, பழக்கவழக்கங்களை இலக்கிய ஆளுமைகளை, இலக்கிய உலகம் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

– உத்தமசோழன்

Category: Tag:

Description

E-Book Link