நமக்காய் இருப்பதே இயற்கை (கவிதைத் தொகுப்பு)

உயரின உறவுகளே!

     நலமும் மகிழ்வும் பெற்று

           நாமாய் வாழ வாழ்த்துகிறேன்!

     ஆசிரிய பணி ஓய்வுக்குப் பின் அகவை 82 -ல் ‘நமக்காய் இருப்பதே இயற்கை’ என்ற கவிதை நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியே!

     நடைமுறைக் கருத்துகளை நிகழும் அனுபவ பாடங்களுடன் எளிய வார்த்தைகளைப் பயனாய்க்கொண்டு எல்லோரும் படித்து உணர எழுதியுள்ளேன்.

     நீங்கள் படிக்கும் போதே இன்றைய சமூக நிலைகளைப் புரிந்து கொள்வீர். எல்லோரும் உண்மையுணர்ந்து நன்மையடைய வேண்டும். நாமாய் வாழ்ந்து, உயரினம் ஒரே இனம் என்பதை மெய்ப்பித்து நம் சந்ததிகள் நலவாழ்வடைய வழிவகைச் செய்யும், முக்கிய தேவைகளை நிறைவாய்ப் பெற உதவுதல் வேண்டும்.

     இப்புத்தகக் கவிதைகள் உண்மைகள் நன்மைகள் இணைந்தளிக்கும் பாடமாக அமையுமென நம்புகிறேன். விரும்புகிறேன்.

என்றும் உயரின உறவில்,

எம். ஏ. தேவதாசன்.

Category: Tag:

Description

E-Book Link