நானே கடவுள் நானே மிருகம்

     இந்த நாடகத்தின் வெற்றிக்குக் காரணம் அனல் பறக்கும் வசனங்களும் அதில் பொதிந்து கிடக்கும் தத்துவக் கருத்துக்களே. ரிஷிகேஷ் பாண்டாவிற்கு எள்ளல் கைவந்த கலையாக இருக்கிறது.

     ரிஷிகேஷ் பாண்டாவின் படைப்பிலக்கியங்கள் பல மொழிகளிலும் ஆக்கம் பெற வேண்டும். ஒடியா மொழியிலிருந்து இந்த நாடகத்தை பேராசிரியை லிப்பி புஷ்பா நாயக் ஆங்கிலத்திற்கு கொண்டு வந்தார். இப்புத்தகம் எனக்கு படிக்கக் கிடைத்தபோது என்னால் ஒரே மூச்சில் படிக்க முடிந்தது. அற்புதமான ஆங்கில நடை ஒரு காரணம். கவித்துவமான உரையாடல்கள் மற்றொரு காரணம். தத்துவார்த்தமான சிந்தனைகள் இன்னொரு காரணம்.

     ஒடியா மொழியில் கிடைத்த மதிப்பும் மரியாதையும், இந்த நாடகத்திற்கு ஆங்கிலத்திலும் கிடைத்திருக்கிறது என்று என் ஒடிசா வாழ் இலக்கிய நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். என் தமிழ் மொழியாக்கத்திற்கும் அது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

– அன்பன் ‘ராஜ்ஜா

Category: Tag:

Description

E-Book Link