நன்முத்துச் சரங்கள்

உயரின உறவுகளே!

     நலமும் மகிழ்வும் பெற்று நாமாக வாழ்த்துகிறேன்.

     நமது இந்திய நாட்டின் பெருமைக்குரிய ஆதார அடிப்படையான – கிராமத்து ஏழை, எளிமை உறவில் – உழைப்பு, செயலின் தொடரில் கல்வியறிவில் அரிய ஆசிரியப் பணியாற்றி, பணி ஓய்வில் கால் நூற்றாண்டை நெருங்கும் முதியவன், சிந்திக்கும் சீவன்.

     பணி ஓய்வோடு உறவுப் பிரிவுகளுடன் தனிமையில் தள்ளாடும் நிலையிலும் எழுதுவேன். எழுதியவை ஏராளம். எஞ்சியவைகளை தேடித்திரட்டிச் சேர்த்து தொகுத்துப் பதிவிடும் – பேரன் உறவில் வி.பி.எக்ஸ். பதிப்பக உரிமையாளர் இலா. விபின் அலெக்ஸ் என்பாரையே சாரும்.

     ‘நன்முத்துச் சரங்கள்’ இப்புத்தகம் ஆர்வமிகு அறிவின சிந்தனையாளர்களோடு படிப்பறிவு குறைந்தவர்களும் எளிதில் கற்றறிந்து தொடரும் அறிவின சந்ததிக்கும் பயன்படவே எழுதியுள்ளேன்.

     நல்அறிவும், பண்புமுள்ளோரெழுதிய அரிய அறிவு நூல்களைப் படியுங்கள். அவை ஏழை எளியோர்க்கும் உயர்வளிக்கும் பொக்கிசமே.

     நான் எழுதிய ‘கவிதைப் புத்தகங்கள்’ தொடருடன், ‘நன்மொழிக் கருத்துரைகள், சிறுகதைகள் யாவுமே படித்த, பார்த்த, ஆய்ந்த, சிந்தித்த மற்றும் நடைமுறையாகும் அனுபவப் பதிவுகளே.

     நான் விரும்புவது – படிப்பது, எழுதுவது. நீங்களும் படித்து பயனடைய விரும்பி வாழ்த்துகிறேன்.

எழுத்தால் உறவில்,

நன்மொழியார் எம். ஏ. தேவதாசன்.

Category: Tag:

Description

E-Book Link