நீ எந்தன் மனைவியானால்…. (கவிதைக் கோலங்கள்)

     நன்மொழியார் எம். ஏ. தேவதாசன் அவர்களின் ‘நீ எந்தன் மனைவியானால்….‘ கவிதை நூல் காதல் மட்டுமில்லாது கடமை, அறிவியல், சமுதாயம், வாழ்வியல் என பல கவிதைகளின் கலவையாக உள்ளது. கவிதைக் கோலங்களாக 70 கவிதைகள் இந்நூலை சிறப்புறச் செய்கின்றன. எளிமையான நடையும், எளிதில் புரிந்து கொள்ள வைக்கும் சொற்களும், நூலாசிரியரின் சிந்தனைகளும் நமக்கு நல்ல அனுபவப் பாடமாக இருக்கும்.

     தான் எழுதும் கவிதைகள் வருங்கால சந்ததிகளுக்கு சிறிதேனும் பயன்பட வேண்டுமென்ற மனநிலையுடனே ஒவ்வொரு கவிதைகளையும் வார்த்துள்ளார். சில கவிதைகள் நூலாசிரியரின் கொள்கையான இறைசிந்தனை பற்றியும் நம்மால் அறிந்து கொள்ள வைக்கிறது. அறிவியல் பற்றிய அவரது கருத்துக்களையும் எளிமையாகக் கொடுத்துள்ளார்.

     குடும்ப வாழ்வுக்கு அவர் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் நம்மை சிந்திக்க வைக்கும், செயல்பட வைக்கும், சீரிய சிந்தனைகளை நம்மில் உருவாக்கவும் வைக்கும்.

     முதுமையின் அனுபவங்களை நமக்கு கவிதையாக, கவிதைக் கோலங்களாக தந்திருக்கிறார்.

Description

E-Book Link