நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்

      தமிழகக் காவல்துறையில் திறமையான, நேர்மையான, மக்கள் நலனை மையப்படுத்தி பணியாற்றிய காவல்துறையினரும் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சியம். புதிதாக அரசுப் பணியில் சேரும் எவருக்கும், யாரை முன்மாதிரியாகக் கொள்வது என்ற தேடல் இருப்பதுண்டு. அந்த வகையில், காவல்துறையில் கடமையாற்ற வாய்ப்புக் கிடைத்தவர்களுக்கு இந்த நூல் ஒரு கையேடு. காவல்துறையின் கடமை, கண்ணியத்தின் முன்னத்தி ஏர் திரு வி.ஆர். லட்சுமி நாராயணன் அவர்கள் குறித்த ஒரு பதிவு.

     லட்சுமிநாராயணன் I.P.S அவர்கள் இந்திய திருநாட்டின் முன்னாள் தலைமை அமைச்சர் நேருவின் மீது அளவுகடந்த மரியாதையும், அவரது கொள்கைகளின்பால் ஈர்ப்பும் கொண்டவர். தேசிய அளவில் நேரு அவர்களையும், தமிழ்நாட்டில் பெருந்தலைவர் கு. காமராஜர் அவர்களையும் போற்றி கொண்டாடிய பெருமகனார். தனது 35 ஆண்டு கால காவல்துறை பணியில் பல்வேறு தலைவர்களுடன், ஆளுமைகளுடன் நெருங்கி பழகியவர். தனக்கு சரி என்று படுவதை தயங்காமல் எடுத்துரைப்பவர். இதனால் பாதிப்புகள் ஏற்பட்ட போது சற்றும் கலங்காமல் தான் கொண்டிருந்த நம்பிக்கைக்கு எதிராக பயணிக்காதவர். அன்றைய தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களை நேருக்கு நேர் விமர்சனம் செய்யும் துணிச்சலும், நெருக்கமும் கொண்டிருந்தவர்.

வாசியுங்கள். நீங்களும், மக்கள் மனதில் நிற்கும் கண்ணியமிக்க காவல்துறை அதிகாரியாக மிளிரலாம். மேலும் ஒரு மனிதன் தன் வாழ்க்கைத் தடத்தினை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்கான ஒரு பாடமும், பதிவும் இந்நூல்.

Description

விரைவில் மின்னூலாக