Description
E-Book Link
நன்மொழிகள் வாழ்க்கைக்கு ஒளிகாட்டும் விளக்குகள்
நன்மொழிகள் சான்றோர் உள்ளத்தின் நறுங்கனிகள்
நன்மொழிகள் பட்டறிவால் உருவாகும் அணிகலன்கள்
நன்மொழிகள் இலக்கியத்தின் இனிய கரும்பு
இந்த நூற்றாண்டில் நம் சமகாலத்தில் குமரிமாவட்டக் கவிஞர் எம்.ஏ. தேவதாசன் அவர்கள் தன் சிறந்த படையலாக இந்த நன்மொழிகள் நூலினை வழங்கியுள்ளார்கள்.
இனிய எளிய நடையில் யாவரும் பொருள் உணரும் முறையில் அமைந்துள்ள இந்நன்மொழிகள் இனியவை. படிப்போர் மனதில் வெள்ளம்போல் பாய்ந்து வளமூட்டுபவை.
காலத்தின் தேவைக்கு இலக்கியம் படைப்பவனே உயர்ந்த கவிஞன். கவிஞர் தேவதாசன் இந்தக் கடமையை நிறைவேற்றியுள்ளார்.
தன் எழுத்துவரிக் கோலங்களைப் பொன்மொழிகளாக்கி நன்மொழிகளாகத் தந்திருக்கும் இப்படைப்பு கவிஞரின் காவியப்படைப்பு.
E-Book Link