ஓலமிடும் ஆற்றுமணல்

      நீருடனான தமிழனின் உறவு என்பது அலாதியானது. நீரை உயிருக்கு இணையாக நினைத்தவன் தமிழன். படுகர், தாங்கல், கயம், பயம், தடாகம், குளம், குட்டம், கிடங்கு, சூழி, அலந்தை, குண்டம், பங்கம், இலஞ்சி, கோட்டம், கேணி, பல்வலம், படு, மடு, பண்ணை, வாவி, வட்டம், தடம், பொய்கை, ஓடை, ஏரி… என முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்களை நீர் நிலைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தவன் தமிழன்.

       தமிழர்களின் பொதுச்சொத்தான தமிழக ஆறுகளையும், ஆற்றோரங்களையும் ஒரு சிலர் தங்களின் தனிச்சொத்தாக உரிமை கொண்டாடத் துவங்கினர். ஆறுகளின் உயிர்நாடியான அதிலிருந்த மணல் சுரண்டப்பட்டது. சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் அரசியல் இருப்பதால் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் அனைத்து அரசுகளுமே அதீத மௌனம் காட்டுகின்றன.

      ஆற்றுமணல் தொடர்ந்து அள்ளப்பட்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு, நோய்களின் தாக்குதல், விவசாயம் பாதிப்பு, இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் வேலையிழப்பு என அவலப்பட்டியல் நீள்கிறது. மணல் கொள்ளையர்களின் பணப்பசிக்கு இரையான பின்னர் மிச்சமிருக்கும் மணலை அடுத்த தலைமுறையினருக்கு காப்பாற்றி வைக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அந்தக் கடமையைச் செய்ய தூண்டுதலாக இந்த நூல் இருக்கும் என நம்புகிறோம். மணல் வெறும் துகள் அல்ல. நமது வாழ்வாதாரம் என்பதை இந்த நூலை வாசித்தப் பின்னர் நீங்கள் உணர்வீர்கள்

Description

விரைவில் மின்னூலாக