புல்லின் குழந்தைகள் (கவிதைகள்)

     இதிலுள்ள பெரும்பாலான கவிதைகள் காதல் கவிதைகள். ஆரோக்கியமான எந்த இளங்கவிஞனாலும் தவிர்க்க இயலாதது காதல். ஆனால் இந்தத் தொகுப்பில் என் கவிதைகள் வெளிப்படுத்துகிற காதல் விசாலமானது என்பது சோசலிச ஆர்வமுள்ள வாசகன் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கவிதையின் என்னவள் அல்லது என்னவன் ஒரு வர்க்கமாக, சமூகமாக, தேசமாக….. ஒரு கொள்கையாகக்கூட பரிமாணம் பெறுவதை அவர்கள் நன்றாகவே அனுபவிக்க முடியும்.

     வி.ஆர்.எம். செட்டியாரின் தாகூர் மொழிபெயர்ப்புகள் மூலம் புதுக்கவிதையினுள் நுழைந்தவன் நான். அந்த பாதிப்பு இன்னும்கூட என்னிடம் இருக்கிறது. என்னைப்போன்ற அனுபவம் உள்ளவர்களுக்கு இந்த நூல் பிடிக்கும். ஆனால் புது இலக்கணத்தில் அளந்து பார்க்கிறவர்களுக்கு….. அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

     ஆயிரம் வடிவமும், வண்ணமும் கொண்ட மலர்க்கூட்டம் கவிதை. எந்த வரையறைக்குள்ளும் அது முடங்கிவிடாது. அழகாக இருக்கிறதா, நல்ல வாசனை இருக்கிறதா, உள்ளே தேன் சுரந்திருக்கிறதா…. நல்லது. கிள்ளி முகருங்கள். நெஞ்சில் சூடிக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் இளமையை திரும்பிப் பார்த்துக் கொள்ள ஒரு கண்ணாடியாகவும் இருக்கக்கூடும் இது.

 அன்புடன்,

பொன்னீலன்.

Description

E-Book Link