சாலையோரம் நிழல் தரும் மரங்கள்

     ராஜ்ஜாவின் “சாலையோரம் நிழல் தரும் மரங்கள்” எனும் இந்நூலில் இடம்பெற்றுள்ள 16 கட்டுரைகள் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் மாந்தன் திங்களிதழில் மார்ச் 2013 முதல் ஜுலை 2014 வரை “ஏணி கோணி தோணி” என்ற தலைப்பில் கட்டுரைத் தொடராக வெளிவந்து வாசகர்களின் ஒட்டு மொத்தப் பாராட்டைப் பெற்றது.

     ஆங்கில மொழியில் இவர் எழுதிய படைப்புகளை இந்திய எல்லையைக் கடந்து உலகுக்கு எடுத்துச் சென்றவர் P. RAJA. ஆங்கில ஏடுகளில் புதுச்சேரியின் பெருமையைப் பறை சாற்றுபவர் இவர். பல படைப்பாளிகளை உருவாக்கியவர். பல எழுத்தாளர்களை ஊக்குவிப்பவர். பட்டங்களைத் தேடிப்போகாதவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவரது கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், விமர்சனங்கள் உள்நாட்டு வெளிநாட்டு இதழ்கள் பலவற்றில் இடம் பெறுகின்றன. இப்படி ராஜ்ஜாவின் படைப்பிலக்கிய சாதனைப்பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

     இத்தகைய சிறப்புமிக்க எழுத்தாளரை உருவாக்கியவர்கள், வழிகாட்டியவர்கள், அவருக்கு துணை நின்றவர்கள், அன்பு பாராட்டியவர்கள் பதினாரு பேர்களை பதினாரு கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியுள்ள கட்டுரைத் தொகுப்பே இந்நூல். ராஜ்ஜாவின் படைப்பாற்றலை எண்ணி எண்ணி வியக்கும் வாசகர்களுக்கு, தன்னை எழுத்தாளனாக உருவாக்கி அந்த சிம்மாசனத்தில் இவரை உட்காரவைப்பதற்காக பாடுபட்டவர்களை, உதவியவர்களை நன்றியோடு நினைத்துப் பார்த்து இக்கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.

     இந்நூல் ராஜ்ஜாவின் வாழ்க்கை வரலாற்றில் ‘படைப்பாளி’ என்ற பகுதியின் சுயசரிதை என்ற சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.

     மூத்தோரை மதித்தல், கற்றோருடன் சேரல், நட்பு பாராட்டல், நன்றி கூறல் போன்றவை மனிதரிடத்திலே குறைந்து கொண்டு வரும் இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் ராஜ்ஜா ஒரு மாறுபட்ட மனிதராகவே இந்த கட்டுரைகளில் வலம் வந்துள்ளார்.

Category: Tag:

Description

E-Book Link