சாரல் கவிதைகள்

     ‘சாரல்’ என்பது மலைச்சாரலையும், மழையையும் குறிக்கும் ஓர் இயற்கைச் சொல் ஆகும். சாரலில் பயிலும் மனம் உடையவர்கள் இயற்கையாகவே கவிதைக்குள் ஆகிவிடுவர். சாரலில் எத்தனை வகைவகை பூக்கள் பூக்கும்? அத்தனைப் பூக்களின் அழகும் மணமும் அவர்கள் கவிதையில் பரிமாணம் கொள்ளும். இந்தக் ‘கவிதை உண்மையை’ நன்மொழிக் கவிஞர் தேவதாசனார் கவிதைகளில் துய்த்து மகிழலாம்.

     சாரல் கவிதைகள் நூல் ‘பூஞ்சைகள் இல்லாத பலாப்பழம்’. வேர்ப்பலா! இதற்குள் 157 சுளைகள் உள்ளன. அத்தனையும் தேன்சுவை.

     ‘பெற்றோரை வணங்குகிறேன்’ முதல் ‘நாமென்பதே உயரின அடையாளம்’ ஈறாக 157 கவிதைத் தலைப்புகளில் எழுதப்பட்ட இக்கவிதை தொகுப்பு ஒரு சிந்தனைப் பெட்டகமாகத் திகழ்கிறது.

     இக்கவிதை தொகுப்பு – சமுதாய நலம் நாடும் ஒரு கவிஞரின் சிந்தனைகளின் அணிவகுப்பு. கண்முன்னே நாம் காணும் அவலங்களின் படப்பிடிப்பு. மானுட ஈடேற்றமே கவிஞரின் உயிர்துடிப்பு.

     இந்தக் கவிதைத் தொகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் குழந்தைக் கவிதைகளுக்கான முழு இலக்கணத்தோடு சிறந்து விளங்குகின்றன.

     மொத்தத்தில் – நன்மொழிக்கவிஞர் எம். ஏ. தேவதாசனின் ‘சாரல் கவிதைகள்’ எல்லோராலும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் எனலாம்.

Description

E-Book Link