சேரென்ற மக்கள்

     திருவிதாங்கூர் அரசால் அடக்கி ஆளப்பட்ட இனம் தமிழினம். ஆனால் முற்காலத்தில் அங்கு ஆண்ட இனம் தமிழினம். இந்த இனத்தில் பிடர் சிலிர்த்த சிங்கம் போல் எழுந்தார் மார்சல் நேசமணி. அவர் தமிழரைச் சாதி மத பேதம் இன்றி மொழியால் ஒன்றிணைத்தார்.

     மாநில மறுசீரமைப்பில் கன்னியாகுமரி முதல் காசர்கோடுவரை ஐக்கிய கேரளம் கேட்ட மலையாளிகளுக்கு எதிராகத் தமிழர் மிகுதியாக வாழும் ஒன்பது வட்டங்களைத் தமிழகத்தோடு இணைக்கப் போராடினார்.

     அந்தப் போராட்டத்தில் திருவிதாங்கூர் அரசு தமிழரைப் கைது செய்து கொடுமைபடுத்தியது, தலைவர்களைச் சிறையில் அடைத்துச் சித்திரவதைச் செய்தது, அதனால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் களம் இறங்கினர். ஊர்வலமும் போராட்டமும் நடத்தினர்.

     போராட்டக் களம் ஒன்றில், தமிழர் தலைவர் ஒருவர் மகன் இனியன், மலையாள தலைவர் மகள் சித்திராவைக் காப்பாற்றுகிறான். அவள் அவனை விரும்பிக் காதலிக்கிறாள். மொழிப்போரில் கீரியும் பாம்பும் போல் போராடினாலும் தனி வாழ்க்கைத் தளத்தில் நட்புடன் வாழ்ந்த இனியன் – சித்திரா குடும்பங்களின் நட்பு, அவர்கள் காதலுக்கு உரமாக அமைகிறது.

     இனியன் – சித்திரா காதல் மலர்த்தோட்டம் சாதி இனப் புயலில் சிக்கியது. அது என்ன ஆனது?

     இதுவே “சேரன்றே மக்கள்” குறுநாவலின் கதை.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக