சித்த மருத்துவம் 100

       இந்நூல் இரசாயன மருந்துகளில் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கும் விதமாக, நோய்களிருந்து விடுபடுவது, பாமர மக்களுக்கும் பயன்படும் விதமாக கடைகளிலும், மருந்து கடைகளிலும் கிடைக்கும் மருந்தைக் கொண்டு நோயைக் குணமாக்கும் முறையை இந்நூல் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

       நவீன ஆங்கில மருந்துகள் பயன்படுத்தும்போது மூலிகை மருந்துகள் எடுக்கக்கூடாது என்ற தவறான கருத்து நம்மிடையே நிலவி வருகிறது. பிற நோய்களுக்கான ஆங்கில மருந்துகள் உட்கொள்பவரும் இந்த மருந்துகளை அதனுடன் உட்கொள்ளலாம். இதனால் எந்தவிதமான எதிர்மறை விளைவுகளும் ஏற்படாது.

      மூலிகை மருந்துகள் ஒரு நோய்க்காக உண்ணும்போது நமக்கே தெரியாமல் இன்னொரு நோயைக் குணமாக்கும். ஜலதோஷத்திற்கு பயன்படுத்தும் வெற்றிலை, மிளகு கஷாயம், தலைவலி, வாயுக்கோளாறு அஜீரணத்தை குணமாக்கும்.

      மூலிகைகளை பயன்படுத்துவதோடு அதனை பாதுகாப்பதும் நம் கடமை ஆகும். ஆசிரியர் எளிமையான முறையில் எவ்வாறு மருந்து, எண்ணெய் தயார் செய்யலாம் என்பது போன்ற விபரங்களை தெளிவாக எழுதியுள்ளார்.

     இந்த புத்தகம் எளிய முறையில் மருந்து தயாரிக்கும் அனைவர் கையிலும் இருக்கவேண்டிய புத்தகம் ஆகும்.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக