சும்மா கிட (டாவோயிசத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட தத்துவார்த்த குறுநாவல்)

     மொழி, மதம், நாடு முதலியவற்றால் வேறுபட்டிருந்தாலும், உண்மையான ஆன்மீகத்தேடல் உள்ள ஞானிகளது சிந்தனை ஒரே வழியிலேதான் செயல்படும், சென்றடையும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாகும்.

     நம்முடைய ஆன்மீக ஞானிகளும், சித்த புருஷர்களும் வாழ்வின் உண்மைகளையும், தெய்வீக நுட்பங்களையும் நன்கு ஆராய்ந்து, தெளிவு பெற்று, நாமும் தெளிவு பெற வழங்கிவிட்டே சென்றுள்ளனர். உழைப்பின்றி வாராதுயர்வு என்பதற்கிணங்க அவர்களது மொழியைப் புரிந்து கொள்ள நாம் கடுமையாக உழைத்து முயன்றாலே, விளங்கிக் கொள்ள இயலும்.

     பாரதமும், பண்டைய சீனமும் பாரம்பரிய பெருமைகளாலும், கலாச்சார மேன்மைகளாலும் உலகின்முன் தலைநிமிர்ந்து நின்ற காலம் ஒன்றிருந்தது.

     உலகில் வாழ வேண்டிய முறைகளை வகுத்துக் காட்டிய ஞானியர்கள் நமக்கு சும்மா இருத்தலின் மேன்மையை உணர்த்தியே சென்றுள்ளனர். ‘சும்மா இருத்தலே சுகம்’ என்றும் ‘சிந்தையை அடக்கிச் சும்மா இரு’, “விழித்திரு’ என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் நமக்கு அறிவுறுத்தியது நடமாடும் சவங்களாகச் செயல்குன்றி சோம்பிக்கிடக்கும் சும்மா இருத்தல் அல்ல; இது வேறு வகையான சும்மா இருத்தலாகும். இந்த சும்மா இருத்தலின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டால், ‘நாம் இருக்க, நீர் நிற்க’ என்று மன்னனிடம் நெஞ்சு நிமிர்த்திச் சொன்ன பட்டினத்தாரின் பான்மை நமக்கும் வந்துவிடும்.

     இந்நூலாசிரியர் ஹென்றி போரெல் என்பவர், ‘சும்மா கிட‘ (WU WEI) என்று உபதேசம் செய்கிறார். டாவோ என்று கடவுளின் தத்துவத்தை, நமது தீர்க்கதரிசிகள், சித்த புருஷர்கள் ஆகியோரின் தத்துவங்களை சாறாகப் பிழிந்து தந்திருக்கிறார். நூலை ஆழமாக, ஆழ்ந்து படிக்க வேண்டும். மீண்டும், மீண்டும் படிக்க வேண்டும். பயன் கிடைக்கும்.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக