தமிழக தலைவர்கள்: அன்றும் இன்றும்

     இந்த நூலின் ஆசிரியர் திரு. ப. திருமலை அவர்கள் தமிழ் வாசிப்பாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். எம்.ஏ. (அரசியல் அறிவியல்) பி.எல்., (சட்டம்) மற்றும் இதழியலில் எம்.பிஃல் பட்டம் பெற்றவர். இதழியலில் முதுநிலை பட்டயபடிப்பு முடித்தவர். காந்திய சிந்தனை மற்றும் பெரியார் சிந்தனை ஆகியவற்றில் பட்டயப் படிப்பும், மார்க்சிய சிந்தனையில் சான்றிதழ் படிப்பும் பயின்றவர். சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிவிட்டு இதழியல் துறைக்கு வந்தவர். தினமலர், தினமணி, குமுதம் ரிப்போர்ட்டர் ஆகிய இதழ்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர். “நமது மண்வாசம்” இதழின் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

     தற்போது பல்வேறு முன்னணி இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். மனித உரிமை மீறல் தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகளில் சில, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டிருக்கின்றன. முப்பத்தைந்தாண்டுகளைக் கடந்து இவரது எழுத்துப்பணி தொடர்கிறது.

     “தமிழக தலைவர்கள் அன்றும் இன்றும்” என்ற இந்த நூல் அரைநூற்றாண்டு கால அரசியல் நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. அரசியல் நிகழ்வுகளை மிக சாதூர்யமாக எள்ளல் நடையில் சொல்வது சிலருக்கு மட்டுமே வாய்த்த கலை. திருமலை அவர்களுக்கு அது வாய்த்திருக்கிறது. என்றாலும் அதனை “கேலி” என நிராகரித்துவிட முடியாது. அதில் ஆழம் அதிகம். சரளமான நடையில் சங்கிலி தொடராக சம்பங்கள் நிறைந்த புத்தகம் இது. ஆரம்பகால அரசியல்வாதிகள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. மேடையேறி பேசும் அரசியல்வாதிகளின் கையேடு இது.

Description

விரைவில் மின்னூலாக