தமிழ் மருத்துவம் 1000

     உலகத்தின் முதல் மருத்துவன் தமிழன். உலகத்தின் முதல் மருத்துவம் தமிழ் மருத்துவம் ஆகும். உலகத்தின் முதன்மொழி தமிழ்மொழி. தமிழ் மொழியின் உட்பிரிவுகள் தான் இப்போது உள்ள பல மொழிகள்.

     கோள்களைப் பற்றி ஆய்வு செய்தவன் தமிழன். பூமியைப் பற்றி ஆய்வு செய்தவன் தமிழன். மண்ணைப் பற்றி ஆய்வு செய்தவன் தமிழன். மூலிகைகளின் இருப்பிடமே லெமூரியாக் கண்டம் தான். இங்கிருந்துதான் எல்லா மூலிகைகளும் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கின்றன.

     கவம் என்பது மனிதனின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். வீட்டின் முன்புறம் பழங்காலத் தமிழன் அலங்காரத்திற்காக மருத்துவ குணங்கள் பொருந்திய மூலிகைச் செடிகளை வைத்திருந்தான். வீட்டின் முன் ஆடாதொடா செடியைப் பயிரிட்டான். இது கவம் வராமல் உடம்பைப் பாதுகாத்தது.

     மூலிகைகள் மனிதனை நோய்வராமல் பாதுகாத்தது. என்னென்ன மூலிகை என்ன நோயைக் குணப்படுத்தும் என்று தெரிந்து வைத்திருந்தான். தேவையான மூலிகைகளை அதிக அளவு பயிரிட்டான்.

     பெண்கள் மருத்துவர்களாக இருந்தனர். குழந்தைகளை பாதுகாக்கும் பெண்களுக்கு மருத்துவச்சி என்று பெயரிட்டு அழைத்தனர். போர்க்காலத்தில் காயம் அடைந்த வீரர்களுக்கு பெண் மருத்துவர்கள் சிகிட்சை அளித்தனர்.

     பெண்கள் ஆண்களுக்கு இணையாக மருத்துவ தொழிலில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் மருத்துவத் துறையில் உயர்ந்த நிலையில் இருந்தனர். ஆங்கிலேயர் வருகைக்குப் பின் மருத்துவத்துறையில் பெண்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படவில்லை.

     உடலைப் பாதுகாக்கும் காயகல்பம் மருத்துவத் துறையின் தனிப் பிரிவாகவே இருந்தது. ஜோதிடம், தத்துவவியல் போன்றவை படிப்பில் முக்கிய துறைகளாக இருந்தன. ஆன்மிகத்தோடு மருத்துவத்துறை இணைந்து செயல்பட்டன. ஆன்மிகத்தோடு அறிவியலும் இணைந்து செயல்பட்டன.

     இந்தப் புத்தகத்தில் 1000 நோய்க்கு மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எளிமையான நோயைக் குணமாக்க என்னென்ன மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளன.

Category: Tag:

Description

விரைவில் மின்னூலாக