தமிழ்ப்பாவை

     திருப்பாவையும், திருவெம்பாவையும் தமிழ்க் கவிதை மலர்த் தோட்டத்திலே நம் நிழல் பரப்பி நிற்கின்றன. இவை வளர்ந்து செழித்த தமிழ் மண்ணில் கவியரசு கண்ணதாசன் ‘தைப்பாவை’ என்றும், கவிதை முனி சுத்தாந்த பாரதி ‘தமிழ்த் திருப்பாவை’ என்றும் இரண்டு தண்ணறு மலர்த்தருக்களை நட்டு விட்டுச் சென்றனர். அந்த மலர்த்தோட்டத்திலே நிழல் தரவும், மலர் தரவும், கனி தரவும் இந்த ‘தமிழ்ப்பாவை’ என்ற மரம், நட்டு நலம் காண எண்ணுகிறார் கவிஞர் சுயம்புலிங்கம்.

     இந்தக் கவிதை மலர்த் தோட்டத்தில் இன்பத்தை நுகர்கின்ற நானும் இக்கவிஞர் வென்றாரா என்றெண்ணிப் பார்க்கிறேன். எண்ணித் துணிந்து மனம் கொண்டவற்றை நாம் ஏற்கும் வண்ணம் ‘வண்ணக் குழம்பாக்கி’ வார்த்தையிலே வார்த்தெடுத்துத் தருகின்றார்.

     சமுதாய மனங்கொண்டு சீர்திருத்தம் பாடாத கவிஞரில்லை. ஆனால் பாவைப் பாடலிலே சீர்திருத்தம் பாடிய கவிஞரும் இவரின்றி வேறிலர். இந்நூல் படைக்கும் கவிஞர் சீர்திருத்தக் கருத்துக்களையும் அங்கங்கே விதைத்துவிட்டுச் செல்கின்றார்.

– பேராசியர் எஸ். குமாரசுவாமி

Category: Tag:

Description

E-Book Link